கிராமப்புற வளர்ச்சி
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கிராமபுற பகுதிகளில் வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்தவும் மேற்பார்வையிடவும் மாவட்ட அளவில் முக்கிய அங்கமாக செயல்படுகிறது. இம்முகமையானது ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தை நடைமுறைபடுத்த உருவாக்கப்பட்டது. பின்னர் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் இம்முகமை மூலம் செயல்படுத்த வரையறுக்கப்பட்டது. ஏப்ரல் 1999 ஆம் ஆண்டு முதல் நிர்வாக செலவினங்களை நிர்வகிக்க தனி நிறுவனமாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அறிமுகப்படுத்தப்பட்டது. இது கிராமபுற மேம்பாடு முகமையினை வலுப்படுத்தவும், வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகத்தையும், அரசையும் இணைக்கும் பாலமாக விளங்குகிறது.
கிராமபுற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன பெரிய புவியியல் பகுதிகள் நிர்வாக தேவைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்துவதில் கீழ்நிலை அதிகாரிகள் மற்றும் சமூகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது கிராமபுற பகுதிகளில் வேலைவாய்புகளை உருவாக்க மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. மாநில அளவில் முதன்மைச் செயலர் ஊரக வளர்ச்சி ஆணையர் ஆகிய அலுவலர்கள் இத்திட்டங்கள் செயல்படுத்துவதில் முழுப் பொறுப்பாவார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அளவில் உள்ள ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், வங்கியாளர்கள், அரசுசாரா தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் சமூகத்தில் நலிவடைந்த மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஆலோசனைகள் வழங்கும் குழுவாக செயல்படுவார்கள். கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்துகின்றன. இத்திட்டங்களின் பயன்களை பொருத்து திட்டங்கள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகிறது. ஊரக பகுதிகளில் தேவைகள் கண்டறிந்து திட்டங்கள் வகுத்து செயல்படுத்தவும், தொழில்நுட்பம் நிர்வாகம் மற்றும் நிதி தொடர்பான செயல்பாடுகளை செயல்படுத்துவதாகும்.
- முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்
- தாய் திட்டம்
- அம்மா பூங்கா
- அம்மா உடற்பயிற்சி கூடம்
- தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
- தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி
- சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்
- தன்னிறைவுத் திட்டம்
- திடக்கழிவு மேலாண்மை திட்டம்
- சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்
- எல்.இ.டி.விளக்குகள்
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்
- பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (கிராமின்)
- பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்
- பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
- தூய்மை பாரத இயக்கம்
- தேசிய ரூர்பன் திட்டம்
- நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்டம்
பெயர் / பதவி | தொடர்பு எண் | மின்னஞ்சல் முகவரி | முகவரி |
---|---|---|---|
கண்காணிப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கிருஷ்ணகிரி. | 04343-230022 | drda[dot]tnkgi@nic[dot]in | மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கிருஷ்ணகிரி. |
துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கிருஷ்ணகிரி. | 04343-236128 | Kgikgri[dot]tnkgi@nic[dot]in | வட்டார வளர்ச்சி அலுவலகம்,கிருஷ்ணகிரி. |
வட்டார வளர்ச்சி அலுவலர், காவேரிப்பட்டிணம். | 04343-252026 | kgikpnm[dot]tnkgi@nic[dot]in | வட்டார வளர்ச்சி அலுவலகம், காவேரிப்பட்டிணம் |
வட்டார வளர்ச்சி அலுவலர், பர்கூர். | 04343-265951 | kgibgur[dot]tnkgi@nic[dot]in | வட்டார வளர்ச்சி அலுவலகம், பர்கூர் |
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மத்தூர் | 04341-256234 | kgimthr[dot]tnkgi@nic[dot]in | வட்டார வளர்ச்சி அலுவலகம், மத்தூர் |
துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊத்தங்கரை. | 04341-220002 | kgiugri[dot]tnkgi@nic[dot]in | வட்டார வளர்ச்சி அலுவலகம், ஊத்தங்கரை. |
துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வேப்பனப்பள்ளி. | 04343-260422 | kgivnpi[dot]tnkgi@nic[dot]in | வட்டார வளர்ச்சி அலுவலகம், வேப்பனப்பள்ளி. |
துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சூளகிரி. | 04344-252224 | kgisgri[dot]tnkgi@nic[dot]in | வட்டார வளர்ச்சி அலுவலகம், சூளகிரி. |
துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒசூர். | 04344-222478 | kgihsur[dot]tnkgi@nic[dot]in | வட்டார வளர்ச்சி அலுவலகம், ஒசூர். |
துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கெலமங்கலம். | 04347-232228 | kgikmgm[dot]tnkgi@nic[dot]in | வட்டார வளர்ச்சி அலுவலகம், கெலமங்கலம். |
துணை வட்டார வளர்ச்சி அலுவலர், தளி. | 04347-234226 | kgithly[dot]tnkgi@nic[dot]in | வட்டார வளர்ச்சி அலுவலகம், தளி. |