மூடு

மாவட்டம் பற்றி

கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் 30 வது மாவட்டமாக தர்மபுரி மாவட்டத்திலிருந்து உருவானது. இந்த மாவட்டம் பசுமையான பள்ளத்தாக்குகள், மலைகள் மற்றும் குன்றுகள் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

‘கிருஷ்ணா’ என்பது ‘கறுப்பு’ என்றும் “கிரி” என்பது ‘மலை’ என்றும் குறிக்கிறது. கறுப்பு கிரானைட் மலைகளுடன் அமைந்துள்ளதால் இந்த மாவட்டம் கிருஷ்ணகிரி என வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ண தேவா ராயர் ஆட்சியின் கீழ் இப்பகுதி வந்தது, எனவே இந்த மன்னர் பெயரிடப்பட்டிருக்கலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டமானது கிழக்கே வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களையும், தெற்கே தர்மபுரி மாவட்டத்தையும், மேற்கே கர்நாடக மாநிலத்தையும், வடக்கே ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களையும் எல்லையாகக் கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 5143 சதுர.கி.மீ.  மேலும் வாசிக்க

பிரதம மந்திரி-கிஸான் சம்மன் நிதி – திட்டத்தின் கீழ் தகுதியற்றோர் பட்டியல்

K. M. Sarayu I.A.S,,
திருமதி ம. சரயு இ. ஆ. ப., மாவட்ட ஆட்சியர்

மாவட்ட விவரங்கள்

பொது
  • மாவட்டம் : கிருஷ்ணகிரி
  • தலைமையகம் : கிருஷ்ணகிரி
  • மாநிலம் : தமிழ்நாடு
  • பரப்பளவு : 5143 ச.கி.மீ.
மக்கள்தொகை
  • மொத்தம் : 18,79,809
  • ஆண்கள் : 9,60,232
  • பெண்கள் : 9,19,577
  • நகர்ப்புற மக்கள்தொகை : 4,28,363
  • கிராமப்புற மக்கள்தொகை : 14,51,446
  • மக்கள்தொகை அடர்த்தி (ச.கி.மீ. ஒன்றுக்கு) : 370
  • பாலின விகிதம் : 956/1000