திட்டங்கள்
சேவை வகை வாரியாக வடிகட்டி
விலையில்லா தையல் இயந்திரம்
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த ஏழ்மை நிலையிலுள்ள மக்கள் சுயமாக தொழில் செய்து வருமானத்தை ஈட்டி பொருளாதார நிலையை மேம்படுத்திட விலையில்லா தையல் இயந்திரங்கள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் பயனாளிகள் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களாகவும், 20 முதல் 45 வயதிற்குட்பட்டவர்களாகவும், தையல் கலை அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும் பயனாளிகள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000 -ம் ஆகும்.சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை மூலம் தையல் இயந்திரங்கள் பெற்ற பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியற்றவர்கள் ஆவார்கள். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான…
விடுதிகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 26 பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளும், 16 மிகப் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளும், 1 சிறுபான்மையினர் நல விடுதியும் சேர்த்து மொத்தம் 43 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இவற்றுள் கல்லூரி மாணவியர் விடுதி 5 மற்றும் கல்லூரி மாணவர் விடுதி 3 ஆகியவையும் அடங்கும். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் அரசு பள்ளிகளில் 4 ஆம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் விடுதிகளில் சேர்ந்து பயிலலாம். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் மேற்படி பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் தங்கி பயில உரிய பள்ளி, கல்லூரி விடுதிகளின் காப்பாளர், காப்பாளினிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல…
விலையில்லா மிதிவண்டிகள் வழங்குதல்
மேல்நிலைப் படிப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக நிதி உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பகளைச் சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் உரிய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் அரசு மற்றம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் பெறத் தகுதி பெற்றவர்கள் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் தமிழக அரசால் வழங்கப்படும் மிதிவண்டிகள் சம்மந்தப்பட்ட பள்ளித்…
மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த கிராமப்புற மாணவியருக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குதல்
கிராமப்புறங்களிலுள்ள மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவியர் தங்களது தொடக்கக் கல்வியினை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.500-ம் 6-ம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு ரூ.1000-மும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் அரசு மற்றம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவியர்கள் பெறத் தகுதி பெற்றவர்கள் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் இத்தொகையினை…
கல்வி உதவித் தொகை திட்டங்கள்
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவியருக்கு பின்வரும் திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பள்ளி படிப்பு உதவித் தொகை பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்றும் குடும்பத்தில் பட்டதாரி எவரும் இருக்கக்கூடாது என்ற நிபந்தனைகளுக்குட்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு கற்பிப்பு கட்டணம் ஆண்டுக்கு ரூ.200 என்ற அளவிலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு ரூ.250…
பிரதம மந்திரி அவாஸ் யோஜனா – அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்
1. கடன் இணைக்கப்பட்ட மானிய திட்டம் இத்திட்டத்தில் வங்கிகளின் மூலம் ரூ.6,00,000/- அல்லது ரூ.9,00,000/- அல்லது ரூ.12,00,000/- வழங்கப்படும். ரூ.6,00,000 த்திற்கு 6.5% வட்டியும், ரூ.9,00,000 த்திற்கு 4% வட்டியும், ரூ.12,00,000 த்திற்கு 3% வட்டியும் தள்ளுபடி செய்யப்படும். 2. மலிவு விலை வீட்டுவசதி திட்டம் இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் ஒரு குடியிருப்பு வழங்கப்படும். ஒரு குடியிருப்பின் கட்டுமான மதிப்பில் 10 சதவிகித தொகையை பயனாளி முன்வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். 3. பயனாளி தானே வீடு கட்டிக்கொள்ளும் திட்டம் இத்திட்டத்தில் பயனாளிக்கு ரூ.2,10,000/- நான்கு தவணைகளாக வழங்கப்படும். பயனாளிகளின் மூலம் கட்டப்படும் வீடானது 300…
தேசிய வளர் இளம் பருவத்தினர் நலத்திட்டம்
வாரந்திர இரும்புச்சத்து மாத்திரை மற்றும் போலிக் அமிலம் திட்டம் அடிப்படையில் இளம் பருவத்தினருக்கான மருத்துவ சேவை மற்றும் மாதவிடாய் கால ஆலோசனை சுகாதாரத்திட்டம் சமுதாயம் சார்ந்த வளர் இளம் பருவத்தினருக்கான சேவைகள். சக கல்வியாளர்களை தேர்வு செய்வதற்கான நிபந்தனைகள் ஒவ்வொரு கிராமத்திலும் ஆயிரம் மக்களுக்கு ஒரு சமுதாய நல்வாழ்வு ஊக்குநர் இருப்பார். அவ்ஊக்குநர் மற்றும் பள்ளி ஆசிரியர் பரிந்துரையின் அடிப்படையில் இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் சக கல்வியாளர்களை தேர்வு செய்யப்படும். நான்கு சக கல்வியாளர்களில் இரண்டு சக கல்வியாளர்கள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பள்ளிக்கு செல்பவர்களாக இருக்க வேண்டும். அவர்களது வயது பதிநான்கு…
தடுப்பூசி
தேசிய தடுப்பூசி திட்டத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடுவதன் மூலம் குழந்தைகள் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. பிரதி வாரம் புதன்கிழமைகளில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் கிராம மற்றும் நகர்புற சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் இலவசமாக போடப்படுகிறது. மாதத்தின் முதல் புதன்கிழமைகளில் துணை சுகாதார நிலையத்திலும் மற்ற புதன்கிழமைகளில் மையத்திற்குட்பட்ட மற்ற கிராம மற்றும் நகர்புற அங்கன்வாடி மையத்தில் போடப்படுகிறது.
வாரந்திர இரும்புச் சத்து மாத்திரை
வாரந்திர இரும்புச் சத்து மாத்திரை 10-19 வயது வரை உள்ள வளர் இளம் பருவத்தினருக்கு பிரதி வாரம் வியாழக்கிழமை மதிய உணவுக்குப்பின் வழங்கப்படுகிறது. இத்திட்டம் வளர் இளம் பருவத்தினரிடம் காணப்படும் இரத்த சோகையை அகற்ற பெரும் உதவியாக உள்ளது. பள்ளி செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி ஆசிரியரிடம் IFA(100MG) பெற்றுக் கொள்கின்றனர். பள்ளி செல்லாத வளர் இளம் பெண்கள் அங்கன்வாடி பணியாளரிடம் பெற்றுக் கொள்கின்றனர்.
தேசிய குடற்புழு நீக்க நாள்
தேசிய குடற்புழு நீக்க நாள் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1 முதல் 19 வரை உள்ள குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரை அனைத்து அரசு அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பள்ளி ஆசிரியர் அல்பெண்டசோல் மாத்திரை வழங்குவார். 1-5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கு பள்ளி செல்லா குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர் வழங்குவார்