மூடு

மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த கிராமப்புற மாணவியருக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குதல்

| துறை: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்

கிராமப்புறங்களிலுள்ள மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவியர் தங்களது தொடக்கக் கல்வியினை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.500-ம் 6-ம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு ரூ.1000-மும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

அரசு மற்றம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவியர்கள் பெறத் தகுதி பெற்றவர்கள்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

இத்தொகையினை பெற உரிய பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு உரிய கேட்புகளை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

பயனாளி:

அரசு மற்றம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவியர்கள்

பயன்கள்:

ஊக்கத்தொகை