மூடு

பிரதம மந்திரி அவாஸ் யோஜனா – அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்

தேதி : 01/06/2015 - | துறை: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்

1. கடன் இணைக்கப்பட்ட மானிய திட்டம்

இத்திட்டத்தில் வங்கிகளின் மூலம் ரூ.6,00,000/- அல்லது ரூ.9,00,000/- அல்லது ரூ.12,00,000/- வழங்கப்படும். ரூ.6,00,000 த்திற்கு 6.5% வட்டியும், ரூ.9,00,000 த்திற்கு 4% வட்டியும், ரூ.12,00,000 த்திற்கு 3% வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்.

2. மலிவு விலை வீட்டுவசதி திட்டம்

இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் ஒரு குடியிருப்பு வழங்கப்படும். ஒரு குடியிருப்பின் கட்டுமான மதிப்பில் 10 சதவிகித தொகையை பயனாளி முன்வைப்பு தொகையாக செலுத்த வேண்டும்.

3. பயனாளி தானே வீடு கட்டிக்கொள்ளும் திட்டம்

இத்திட்டத்தில் பயனாளிக்கு ரூ.2,10,000/- நான்கு தவணைகளாக வழங்கப்படும். பயனாளிகளின் மூலம் கட்டப்படும் வீடானது 300 சதுர அடிக்கு அதிகமாகவும் 600 சதுர அடிக்கு மிகாகலும் இருத்தல் வேண்டும்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

  • வருட வருமானம் மூன்று லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும்.
  • பயனாளி திருமணமானவராக இருத்தல் வேண்டும்.
  • பயனாளிகளுக்கு கான்கிரிட் வீடு இருத்தல் கூடாது.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

பயனாளிகள் நில உரிமை பத்திரம் அல்லது பட்டா, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை சமர்ப்பித்தல் வேண்டும்.

பயனாளி:

வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள இந்திய குடிமக்கள்

பயன்கள்:

சொந்த வீடு கட்ட நிதி உதவி