மூடு

திட்டங்கள்

சேவை வகை வாரியாக வடிகட்டி

வடிகட்டி

தூய்மை பாரத இயக்கம்

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) – முக்கிய நோக்கங்கள் கிராம பகுதிகளில் தூய்மை சுகாதாரம் மற்றும் திறந்தவெளி மலம் கழித்தலற்ற நிலையினை உருவாக்கி அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த ஊக்குவித்தல். 02 அக்டோபர் 2019-ற்குள் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)-த்தின் குறிக்கோளினை அடைய கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த துரிதப்படுத்துதல் சமூக ஊக்குவிப்பாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை நிறுவனங்கள் மூலம் கிராமப்புறங்களில் சுகாதாரம் குறித்து கல்வி மற்றும் விழிப்புணாதர்வுகள் செய்து அப்பகுதிகளில் நீடித்த நிலைத்த சுகாதாரத்தினை ஏற்படுத்துதல். பாதுகாப்பான சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த நிலைத்த சுகாதாரத்தினை ஏற்படுத்தும் பயனுள்ள தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல். கிராமப்புறங்களில் தூய்மைக்காக…

வெளியிடப்பட்ட தேதி: 06/07/2018
விவரங்களை பார்க்க

பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்

கட்டம் I கிராமப்புற மக்களின் வறுமையை போக்கும் விதமாக “பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தினை” 25 டிசம்பர் 2000-ல் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து காலங்களிலும் ஆண்டு முழுவதும் உதவக்கூடிய வகையிலும் சிறுபாலங்கள் மற்றும் வடிகால் வசதியுடன் கூடிய சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மக்கள் தொகை 500 உள்ள அனைத்து குக்கிராமங்களிலும் சாலைகள் மூலம் இணைக்க இத்திட்டத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கட்டம் II இத்திட்டம் மே-2013-ல் தொடங்கப்பட்டது. மக்களின் போக்குவரத்து மற்றும் சந்தை வசதிக்காக ஏற்கனவே உள்ள கிராம சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. மக்களின் பொருளாதாரம் மற்றும் ஊரக சந்தைகள் மேம்பாடு அடையும் வகையில்…

வெளியிடப்பட்ட தேதி: 06/07/2018
விவரங்களை பார்க்க

பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்

23.12.1993 அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் இத்திட்டம் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. முதலில் இத்திட்டமானது ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இத்திட்டத்தின் முதல் வழிகாட்டு நெறிமுறைகள் பிப்ரவாp 1994-ல் வெளியிடப்பட்டது. இதில் இத்திட்டத்தின் கருத்து செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியன தொpவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அக்டோபர் 1994-ல் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது. இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைசியாக ஜுன் 2016-ல் திருத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கமானது பாராளுமன்ற உறுப்பினர் தங்களது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், ஆரம்பக்கல்வி, பொது சுகாதாரம், தூய்மைப் பணிகள், சாலைப்பணிகள் மற்றும் இதர பணிகளில் முக்கியமானவற்றை தேர்வு செய்து…

வெளியிடப்பட்ட தேதி: 06/07/2018
விவரங்களை பார்க்க

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (கிராமின்)

இத்திட்டத்தில் 60% விழுக்காடு மத்திய அரசு நிதி 40% விழுக்காடு மாநில அரசு நிதி என்ற விகிதத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது ஒரு மத்திய அரசு திட்டமாகும். ஊரக பகுதியில் 2022-க்குள் வீடுகள் இல்லாதவர்களுக்கும் மற்றும் பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டி தருவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். வீடுகள் கட்ட தேவையான நிலப்பரப்பு 269 சதுரடி இருக்க வேண்டும். மொத்த மதிப்பீடு ரூ.170000 ஆகும். இதில் மத்திய அரசு நிதி (ரூ.72,000) + மாநில அரசு நிதி (ரூ.48,000) + மேற்கூரை அமைக்க மாநில கூடுதல் நிதி (ரூ.50,000). மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை…

வெளியிடப்பட்ட தேதி: 06/07/2018
விவரங்களை பார்க்க

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இயற்றப்பட்டது. 01/04/2008 முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நோக்கம் ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி இந்த வேலை வாய்ப்பின் மூலம் பொது சொத்துக்களை உருவாக்குதல் புதிய அணுகுமுறைகள் மொத்தம் உள்ள 333 ஊராட்சிகளிலும் தொழிலாளர்களின் ஊதியம்தர் வங்கி கணக்கில் மின்னணு நிதி மாற்றம் மூலமாக அரசு கணக்கிலிருந்து நேரடியாக தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு ஊதியத்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது 09.11.2016 முதல் 333 ஊராட்சிகளிலும் தொழிலாளர்களின் ஊதியம் வங்கி கணக்கில் பயனாளியின் ஆதார்…

வெளியிடப்பட்ட தேதி: 06/07/2018
விவரங்களை பார்க்க

எல்.இ.டி.விளக்குகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்டு, கிராம ஊராட்சிகளில் தெரு விளக்குகளில் உள்ள குழல் விளக்குகள், சோடியம் ஆவி விளக்குகள் மற்றும் பாதரச ஆவி விளக்குகளுக்கு பதிலாக எல்.இ.டி.விளக்குகள் பொருத்தும் பணிகள் 2015-16-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

வெளியிடப்பட்ட தேதி: 06/07/2018
விவரங்களை பார்க்க

சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், நக்சலைட்டுகளின் பிரச்னைகளை தடுத்திடும் வகையில் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான சிறப்புத் திட்டமாக 2003-04ம் ஆண்டு சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு முறையே தலா ரூ.700 இலட்சம் மற்றும் ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பசுமை வீடுகள் கட்டுதல், ஆவின் பாலகம் கட்டுதல், வேளாண் கூலி விவசாயிகளுக்கு பூச்சி மருந்து தெளிப்பான் வாங்குதல், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குதல், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்தல், அங்கன்வாடி மையங்களை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட…

வெளியிடப்பட்ட தேதி: 06/07/2018
விவரங்களை பார்க்க

திடக்கழிவு மேலாண்மை திட்டம்

மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் பகுதி வாரியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பின்வரும் நடைமுறைகளால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்திட கீழ்கண்ட வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 150 வீடுகளுக்கு ஒரு தூய்மை காவலர் வீதம் 2663 தூய்மை காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வீடுதோறும் குப்பைகள் சேகாpக்கப்படுகின்றன. 300 வீடுகளுக்கு ஒரு மூன்று சக்கர வண்டிவீதம் 2111 வண்டிகள் வழங்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்பட்டு தரம்பிரிக்கும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. 333 ஊராட்சிகளில் 910 தரம் பிரிக்கும் மையங்கள் மூலமாக மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகின்றன. 1820 குப்பைகுழிகளில் மக்கும் குப்பைகள்…

வெளியிடப்பட்ட தேதி: 06/07/2018
விவரங்களை பார்க்க

தன்னிறைவுத் திட்டம்

தமிழ்நாடு அரசு பொதுமக்கள் பங்களிப்புடன் பணிகள் செயல்படுத்த தன்னிறைவுத் திட்டம் என்ற திட்டத்தினை 2011-12-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. 2017-18-ம் ஆண்டு தன்னிறைவுத் திட்டத்தின்கீழ் 10.83 இலட்சம் பொதுமக்கள் பங்குத் தொகை பெறப்பட்டு அங்கன்வாடி மையங்கள் மற்றும் சுற்றுச் சுவர் கட்டும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வெளியிடப்பட்ட தேதி: 06/07/2018
விவரங்களை பார்க்க

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்

சட்ட மன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் தனது தொகுதிக்குத் தேவைப்படும் முக்கியப் பணிகளை செயல்படுத்திடவும் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சிறப்பு அம்சங்கள் இத்திட்டம், மாநில அரசின் முழு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். இதன்படி ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தனது தொகுதிகளில் தேவைப்படும் பணியினைக் கண்டறிந்து அப்பணியினை செயல்படுத்திட பரிந்துரைப்பார் ஊரக மற்றும் நகர்ப் புறங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டு ஒன்றிற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 2011-12 ஆம் ஆண்டு முதல் 2016-17 ஆம் ஆண்டு வரை ரூ.200.00…

வெளியிடப்பட்ட தேதி: 06/07/2018
விவரங்களை பார்க்க