மூடு

மகளிர் திட்டம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

தமிழக அரசு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தை 2012-13 முதல் ஒரு சிறப்பு திட்டமாக செயல்படுத்தி வருகிறது. 60:40 என்ற விகிதத்தில் இத்திட்ட செலவினம் இந்தியா அரசு மற்றும் மாநில அரசால் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் நோக்கங்கள் கிராமப்புறங்களில் ஏழைகளின் வலுவான மற்றும் துடிப்பான மகளிர் அமைப்புகளை உருவாக்குவதாகும், இது வாழ்வாதார மேம்பாடுகள் மற்றும் நிதி மற்றும் பிற சேவைகளை அடைவதன் மூலம் அவர்களின் குடும்ப வருமானங்களை அதிகரிக்க உதவுகிறது. இந்த திட்டத்தின் இலக்கானது சமூகத்தின் ஏழை மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களையும் உள்ளடக்கியுள்ளது. சமூக அடிப்படையிலான அமைப்புக்கள் (CBOs) அமைக்கப்பட்டு இலக்கு மக்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குகின்றன.

முக்கிய அம்சங்கள்

  • விடுபட்டுள்ள ஏழை மக்களை அடையாளங்காணல் மற்றும் சுய உதவி குழுவில் இணைத்தல்.
  • கிராமப்புற ஏழைகளைக் கொண்டு சமூக அமைப்புகளை நிறுவுதல் மற்றும் பலப்படுத்துதல்.
  • திறனை வளர்ப்பதன் மூலம் கிராமப்புற ஏழைகளின் சமூக மேம்பாடு.
  • ஏழைகளின் வாழ்வாதாரங்களை ஊக்குவித்தல், சமூகத்தில் வன்கொடுமைக்கு இலக்காக மக்கள் மற்றும் கூடிய மாற்றுத் திறனாளிகள் ஆகியோரும் இதில் அடங்குவர்.
  • சுய உதவி குழு தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்த வாய்ப்புகளை வழங்குதல்.
  • உறுப்பினாகள் பொருளாதார நடவடிக்கைகளை எடுப்பதற்கு சுய உதவிக் குழுக்களுக்கு நிதியுதவி அளித்தல்.
  • அரசு துறைகள் மூலம் தங்கள் நிதி மற்றும் நிதி சாராத சேவைகள் மற்றும் பயனுள்ள முறையில் அவற்றைப் பயன்படுத்துவது ஆகியவற்றை ஒருங்கிணைத்தல்.
  • கிராமப்புற ஏழை மக்கள் அடிப்படை வசதிகளை அணுகுவதற்கும் அவர்களது சுற்றுச்சூழலையும் சுகாதாரத்தையும் முறையே பேணுவதற்கும் பாதுகாப்பதற்கும் பயிற்சியளிக்கிறது.

தீன்தயாள் அந்தோயோதயா திட்டம் – தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம்

தீன்தயாள் அந்தோதயா திட்டம் – தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் (DAY-NULM) நகர்ப்புற ஏழை குடும்பங்களை வறுமை மற்றும் வன்கொடுமை பாதிப்புக்குள்ளாக்குவதிலிருந்து பாதுகாப்பதன் பொருட்டு அவர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் திறமையான ஊதிய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதன் மூலம் அவர்களது வாழ்வாதாரங்களில் நிலையான ஒரு பெரிய முன்னேற்றத்தை விளைவிக்கின்றது. ஏழைகளின் வலுவான அடிமட்ட அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் நிலையான வாழ்வாதாரத்திற்கு அடிகோலுகிறது. 2014-15ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் நிதியளித்து மத்திய அரசின் திட்டமாக DAY-NULM உள்ளது.

DAY-NULM இன் கூறுகள் பின்வருமாறு:

  • சமூக அமைப்புகளை நிறுவதல் மற்றும் அவற்றின் நிலைத்த வளர்ச்சியை உறுதி செய்தல்
  • திறன் வளர்ப்பு மற்றும் பயிற்சி
  • திறன் பயிற்சி மூலம் வேலைவாய்ப்பு உறுதி செய்தல்
  • சுய வேலைவாய்ப்பு திட்டம்
  • நகர தெருவோர வணிகர்களுக்கு (SUH) க்கு திட்டங்களை செயல்படுத்துதல்
  • நகர்ப்புற வீடற்ற (SUSV), மக்களுக்கான திட்டம், சிறப்பு கூறு திட்டம், புதிய, கண்டுபிடிப்பு & சிறப்பு திட்டங்கள் (I & SP) செயல்படுத்துதல் ஆகியவையும் இதில் அடங்கும்

திட்டங்கள்

  1. கிராம வறுமை ஒழிப்புச் சங்கம்
  2. குழு ஆதார நிதி வழங்குதல்
  3. நலிவுற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு நிதி
  4. சமுதாய முதலீட்டு நிதி
  5. தீன் தயாள் உபாத்யாயா ஊரக திறன் மேம்பாட்டு திட்டம்
  6. வேலை வாய்ப்பு முகாம் நடத்துதல்
  7. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி கடன்
  8. மகளிர் சுய உதவிக் குழுக்காளுக்கான வட்டி மானியம்
  9. தேசிய நகாபுற வாழ்வாதார இயக்கதில் புதிய மகளிர் சுய உதவி குழுக்களை அமைத்து நிலைபடுத்துதல்
  10. நகர்புற ஏழைகளுக்கு சுய வேலை வாய்ப்புக்கு கடன் அளித்தல
  11. திறன் பயிற்சி மூலம் வேலை வாய்ப்பு அளித்தல்
  12. அம்மா இருசக்கர வாகனத்திட்டம்
தொடர்பு அலுவலர் விவரம்
பெயர் / பதவி தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி முகவரி
திட்ட இயக்குநர் 04343-235267 po[dot]mahalirthittam@gmail[dot]com 106, இரண்டாவது தளம், மாவட்ட இயக்க மேலாண்மை, கிருஷ்ணகிரி

தொடர்புடைய வலைத்தள முகவரி

  1. http://www.tamilnadumahalir.org
  2. http://ddugky.gov.in