மூடு

ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம்-தேசிய தோட்டக்கலை இயக்கம்

தேதி : 28/09/2020 - | துறை: தோட்டக்கலை

புதிய பரப்பு விரிவாக்க திட்டம்


 • கலப்பின காய்கறிகளின் சாகுபடி (தக்காளி) – அரசு தோட்டக்கலை பண்ணைகளில் குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ரூ.20000/எக்டா் வீதம் மானியமாக வழங்கப்படுகிறது.

 • அடா் நடவு மா சாகுபடி – ஒரு எக்டருக்கு ரூ. 9840/-.

 • மலர் பயிர் சாகுபடி: சாமந்தி பயிரிட ஒரு எக்டருக்கு ரூ. 16000/- மற்றும் சம்பங்கி சாகுபடிக்கு பின்னேற்பு மானியத் தொகை விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு ரூ.60000/- வீதம் வழங்கப்படுகிறது.

 • மிளகாய் சாகுபடி- ஒரு எக்டருக்கு ரூ.12000/- வீதம் வழங்கப்படுகிறது.

 • கொய் மலர் சாகுபடி- ஒரு எக்டருக்கு ரூ. 40000/-வீதம் பட்டியலினத்தவா் பெண்களுக்கு மற்றும் ஒரு எக்டருக்கு ரூ.25000/- வீதம் பொது இனத்தவருக்கு முறையே 40% மற்றும் 25% மானியமாக வழங்கப்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட சாகுபடி


 • பசுமைக்குடில்: பசுமைக்குடில் அமைப்புகளுக்கு 50% மானியம். ஒரு சதுர மீட்டருக்கு ரூ.467.50/-, ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் 4000 சதுர மீட்டர் அனுமதிக்கப்படுகிறது.

 • நிழல்வலை கூடாரம் அமைப்பதற்கு ஒரு பயனாளிக்கு 50% மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு சதுர மீட்டருக்கு ரூ.355/- வீதம் அதிகபட்சம் ஒரு பயனாளிக்கு 4000 சதுர மீட்டா் அனுமதிக்கப்படுகிறது.

 • நிலப்போர்வை: 50% மானியம் வழங்கப்படுகிறது. ஒரு எக்டருக்கு ரூ.16000/- வீதம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

 • நீர் ஆதாரங்களை உருவாக்குதல்: தனி நபர்களுக்கான நீர் சேமிப்பு முறையை ஊக்குவித்தல், பண்ணைக் குட்டைகள், ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகள் ஆகியவற்றை உருவாக்க ரூ. 75000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை (INM)


 • நுண்ணீா் ஊட்டச்சத்துக்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க, ஒரு எக்டருக்கு ரூ.1200/- வீதம் நுண்ணீா் ஊட்டச்சத்துக்கள் விவசாயிகளிடையே விநியோகிக்கப்படுகிறது.

தேனீ வளா்ப்பு மூலம் மகரந்தச் சோ்க்கை ஊக்குவித்தல்


 • உற்பத்தியை அதிகரிக்க, தேனீ காலனிகள் விவசாயிகளுக்கு 40% மானியத்தில் ஒரு காலனிக்கு ரூ.1600/- மற்றும் தேன் பிரித்தெடுக்கும் இயந்திரங்களுக்கு ரூ.8000/- வழங்கப்படுகிறது.

தோட்டக்கலை இயந்திரமயமாக்கல்


 • 20HP மினி டிராக்டர் வாங்க ரூ.75000/- மற்றும் 8 ஹெச்பி பவர் டில்லருக்கு ரூ.60000/-க்கு முறையே 25% மற்றும் 40% மானியமாக வழங்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த அறுவடை பின் செய் மேலாண்மை


 • தோட்டக்கலை உற்பத்தியை தரம் பிரித்தல், சுத்தம் செய்தல் மற்றும் பொதி செய்தல் ஆகியவற்றிற்காக சிப்பம் கட்டும் அறைகளை நிர்மானிக்க 50% மானியம் ரூ. 2.00 லட்சம் வீதம் வழங்கப்படுகிறது.

 • தரம் பிரித்தல், சுத்தம் செய்தல், கழுவுதல், உலர்த்துதல் மற்றும் தோட்டக்கலை உற்பத்தியை பொதி செய்தல் ஆகியவற்றுக்காக ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறைகளை நிர்மானிக்க 35% மானிய விகிதத்தில் ரூ. 17.50 லட்சம் வழங்கப்படுகிறது.

 • தோட்டக்கலை உற்பத்திகளை சேமிக்கும் நோக்கத்திற்காக 35% மானியமாக முன் குளிரூட்டும் அலகு அமைக்க ரூ. 8.75 லட்சம் வழங்கப்படுகிறது.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்


 • பயனாளி TNHORTNET இல் பதிவு செய்யப்பட வேண்டும்

 • பயனாளி உழவன் பதிவு, HORTNET இல் பதிவு செய்யப்பட வேண்டும்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்


 • விண்ணப்ப படிவம்

 • சிட்டா மற்றும் அடங்கல் (அசல்)

 • நில வரைபடம் நகல்

 • ஆதார் அட்டை நகல்

 • குத்தகைதாரர்களாக இருந்தால், பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம் வழங்கப்பட வேண்டும்

 • மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கைகள்

 • பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் (3 எண்)

 • குடும்ப அட்டை நகல்

 • வங்கி கணக்கு விவரம்

 • ரூ.50,000/- க்கு மேல் உள்ள திட்ட கூறுகளுக்கான பிரமாண பத்திரம்

 • செயல்படுத்தும் திட்ட இனங்களின் பல்வேறு கட்டங்களில் புகைப்படங்கள் (புதிய பரப்பு விரிவாக்கம் மற்றும் திட்ட அடிப்படையிலான செயல்பாடுகளுக்கு) திட்ட பணிகள் முடிந்ததும் தேசிய தோட்டக்கலை இயக்க சின்னம் பொறித்த திட்ட அறிவிப்பு பலகை நிறுவப்பட வேண்டும்.

பயனாளி:

அனைத்து விவசாயிகள்

பயன்கள்:

மானியம்

விண்ணப்பிப்பது எப்படி?

பயனாளி TNHORTNET இல் பதிவு செய்யப்பட வேண்டும்
பயனாளி உழவன் பதிவு, HORTNET இல் பதிவு செய்யப்பட வேண்டும்