மூடு

சுகாதாரம்

சேவை வகை வாரியாக வடிகட்டி

வடிகட்டி

தேசிய வளர் இளம் பருவத்தினர் நலத்திட்டம்

வாரந்திர இரும்புச்சத்து மாத்திரை மற்றும் போலிக் அமிலம் திட்டம் அடிப்படையில் இளம் பருவத்தினருக்கான மருத்துவ சேவை மற்றும் மாதவிடாய் கால ஆலோசனை சுகாதாரத்திட்டம் சமுதாயம் சார்ந்த வளர் இளம் பருவத்தினருக்கான சேவைகள். சக கல்வியாளர்களை தேர்வு செய்வதற்கான நிபந்தனைகள் ஒவ்வொரு கிராமத்திலும் ஆயிரம் மக்களுக்கு ஒரு சமுதாய நல்வாழ்வு ஊக்குநர் இருப்பார். அவ்ஊக்குநர் மற்றும் பள்ளி ஆசிரியர் பரிந்துரையின் அடிப்படையில் இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் சக கல்வியாளர்களை தேர்வு செய்யப்படும். நான்கு சக கல்வியாளர்களில் இரண்டு சக கல்வியாளர்கள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பள்ளிக்கு செல்பவர்களாக இருக்க வேண்டும். அவர்களது வயது பதிநான்கு…

வெளியிடப்பட்ட தேதி: 20/06/2018
விவரங்களை பார்க்க

வாரந்திர இரும்புச் சத்து மாத்திரை

வாரந்திர இரும்புச் சத்து மாத்திரை 10-19 வயது வரை உள்ள வளர் இளம் பருவத்தினருக்கு பிரதி வாரம் வியாழக்கிழமை மதிய உணவுக்குப்பின் வழங்கப்படுகிறது. இத்திட்டம் வளர் இளம் பருவத்தினரிடம் காணப்படும் இரத்த சோகையை அகற்ற பெரும் உதவியாக உள்ளது. பள்ளி செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி ஆசிரியரிடம் IFA(100MG) பெற்றுக் கொள்கின்றனர். பள்ளி செல்லாத வளர் இளம் பெண்கள் அங்கன்வாடி பணியாளரிடம் பெற்றுக் கொள்கின்றனர்.

வெளியிடப்பட்ட தேதி: 20/06/2018
விவரங்களை பார்க்க

தேசிய குடற்புழு நீக்க நாள்

தேசிய குடற்புழு நீக்க நாள் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1 முதல் 19 வரை உள்ள குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரை அனைத்து அரசு அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பள்ளி ஆசிரியர் அல்பெண்டசோல் மாத்திரை வழங்குவார். 1-5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கு பள்ளி செல்லா குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர் வழங்குவார்

வெளியிடப்பட்ட தேதி: 20/06/2018
விவரங்களை பார்க்க

புதுயுகம்

தமிழக அரசின் முத்தான புதிய திட்டம் வளரிளம் பெண்களின் பிரச்சனைகளை மனதில் கொண்டு தமிழக அரசு 10 வயது முதல் 19 வயதுடைய வளர் இளம் பருவ பெண்களுக்கு விலையில்லா சானிடரி நாப்கின்கள் வழங்கும் ஒரு புதிய திட்டத்தை தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இளம் பெண்கள் ஒவ்வொருவருக்கும் 6 சானிடரி நாப்கின்கள் கொண்ட ஒரு பை வீதம் மூன்று பைகள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும். பள்ளி செல்லும் இளம் பெண்கள் பள்ளி ஆசிரியையிடம் நாப்கின்கள் பெற்றுக் கொள்கின்றனர். பள்ளி செல்லாத இளம் பெண்கள் கிராம சுகாதார செவிலியரிடம் (அ) அங்கன்வாடி பணியாளரிடம்…

வெளியிடப்பட்ட தேதி: 20/06/2018
விவரங்களை பார்க்க

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு

பிறப்பு இறப்பு பதிவானது நிகழ்வு நடைபெற்ற இடங்களில் மட்டும் பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு பிறப்பு மற்றும் இறப்பு விதி 2000 –ன் படி 1.1.2000 முதல் பிரிவு 30-ன் படி பிறப்பு மற்றும் இறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். பிறப்பு மற்றும் இறப்புகளை 21 நாட்களுக்கு மேல் ஓராண்டிற்குள் பதிவு செய்வதற்கு கால தாமதப் பதிவு கட்டணம் செலுத்தவேண்டும். ஓராண்டிற்கு மேல் பிறப்பு மற்றம் இறப்புகளை பதிவு செய்ய அரசாணை 293 ன் படி வருவாய் கோட்டசியர் அவர்களிடம் ஆணை பெற்று பதிவு செய்ய வேண்டும். குழந்தையின் பெயரினை பதிவு செய்யப்பட்டிருப்பின் பின்…

வெளியிடப்பட்ட தேதி: 20/06/2018
விவரங்களை பார்க்க

அம்மா குழந்தைகள் நலபெட்டகம்

அனைத்து அரசு மருத்துவனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடக்கும் பிரசவத்திற்கு ரூ.1000 மதிப்பிலான அம்மா நலப் பெட்டகம் இலவசமாக வழங்கப்படுகிறது. இப்பெட்டகத்தில் 16 பொருட்கள் அடங்கியுள்ளது. குழந்தைக்கு – ஆடை துண்டு படுக்கை கொசு வலை எண்ணெய் சோப் நகவெட்டி விளையாட்டுப் பொருள் ஷாம்பு, தாய் கை கழுவும் திரவம் சோப் சௌபாக்ய லேகியம் மேற்கூறிய பொருட்கள் பாதுகாப்புடன் கூடிய பெட்டியில் வைத்து பிரசவித்த தாய்மார்களுக்க வழங்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட தேதி: 20/06/2018
விவரங்களை பார்க்க

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தில் பேறுகால நிதி உதவித் தொகையாக ரூ.12000 ரூபாயிலிருந்து ரூ.18000 ரூபாய் வழங்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆணை வழங்கியுள்ளது. இத்திட்டம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் போன்றவற்றை குறைக்க காரணமாக இருந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5 தவணை முறைகளில் ரூபாய் 18000 வழங்கப்படுகிறது. மேலும் ரூ.4000 மதிப்பிலான ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் வழங்கப்படுகிறது. தவணை தவணைநிபந்தனைகள்தொகை I தவணை கர்ப்பமுற்று 12 வாரத்திற்குள் கிராம நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து…

வெளியிடப்பட்ட தேதி: 20/06/2018
விவரங்களை பார்க்க

பால் ஸ்வஷ்திய காரியகரம்

ராஷ்ட்ரிய பால் ஸ்வஷ்திய காரியகரம் என்ற திட்டம் ஏப்ரல் 2015-ஆம் வருடம் மத்திய அரசால் நிருவப்பட்டது.இத்திட்டத்தின் நோக்கமானது பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து ஆரம்ப நிலையில் உள்ள நோயினை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே ஆகும். இப்பரிசோதனை நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டு மேல் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. பிறவிக்குறைபாடு சத்துக்குறைபாடு நோய்கள் வளர்ச்சிக்குறைபாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தை பிறந்தவுடன் முதல் நிலை பரிசோதனையானது மருத்துவ அலுவலர், சுகாதார செவிலியர் மற்றும் துனை செவிலியரால் பரிசோதிக்கப்படுகிறது. வீட்டளவிலான குழந்தைகள் பராமரிப்புத் திட்டத்தின்கீழ் (HBNC) குழந்தை பிறந்து 48…

வெளியிடப்பட்ட தேதி: 20/06/2018
விவரங்களை பார்க்க

மக்கள்தொகை அடிப்படையிலான தொற்றாநோய்களை கண்டறியும் திட்டம்

பொதுவாக மொத்த மக்கள்தொகைகளை 30% – 40% மட்டுமே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை மேற்கொள்கின்றனர். மீதமுள்ள மக்களுக்கு தொற்றாநோய்களுக்கான கண்டறியும் பரிசோதனைகள் அடைவது கடினமாகவே உள்ளது எனவே மக்கள்தொகையின் அடிப்படயிலான துனை சுகாதார நிலைய அளவில் தொற்றாநோய்களுக்கான கண்டறியும் பரிசோதானைகளை மேற்கொள்வது அவசியமகிறது. மக்கள்தொகை அடிப்படையிலான தொற்றாநோய்களை கண்டறியும் இத்திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20 நவம்பர் 2017 அன்று மேலும் புதுக்கோட்டை,பெரம்பலூர் மாவட்டத்துடன் சேரத்து ஆரம்பிக்கப்பட்டது.ஒவ்வொரு துனை சுகாதார நிலைய அளவில் ஒரு களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் இப்பணியை மெற்கொள்கின்றனர். இத்திட்டத்தில் ஒவ்வொரு களப்பணியாளர்களும் வீடு வீடாக சென்று 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இரத்தகொதிப்பு மற்றும்…

வெளியிடப்பட்ட தேதி: 19/06/2018
விவரங்களை பார்க்க

தொற்றாநோய் தடுப்பு பிரிவு

தமிழகத்தில் 10.4% பேர் நீரிழிவு நோயாலும், 20 % பேர் உயர் இரத்த அழுத்தத்தாலும், 23 % பேர் உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருதய நோயிகளிலான இறப்பு விகிதம் தமிழகத்தில் 360 டொ 430 / 100000 ஆகும். இது இந்திய அளவில் மிக அதிகமாக உள்ளது. எனவே தொற்றா நோய்களானது மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்ப்படுத்துகின்றது. இப்பிரிவில் 30 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் இரத்தகொதிப்பு, சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை கொடுக்கபடுகிறது. மேலும் 30 வயதிற்க்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மார்பக புற்று நோய் பரிசோதனை மற்றும் கர்ப்பபைவாய் புற்றுநோய் பரிசோதனை…

வெளியிடப்பட்ட தேதி: 19/06/2018
விவரங்களை பார்க்க