மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அரசு விடுதி வசதிகள், கல்வி உதவித் தொகை, பெண்கல்வி ஊக்குவிப்புத்தொகை, இலவச மிதிவண்டிகள், தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டி மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த-தொழில் துவங்க TABCEDCO/ TAMCO மூலமாக பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் உலமாக்களுக்கு பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
திட்டங்கள்
- கல்வி உதவித் தொகை
- மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த கிராமப்புற மாணவியருக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குதல்
- விலையில்லா மிதிவண்டிகள் வழங்குதல்
- விடுதிகள்
- விலையில்லா தையல் இயந்திரம்
- விலையில்லா தேய்ப்பு பெட்டி
- நரிக்குறவர் நல வாரியம்
- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்
- சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகைதிட்டம் பற்றிய விளக்கம்
- உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்
பெயர் / பதவி | தொடர்பு எண் | மின்னஞ்சல் முகவரி | முகவரி |
---|---|---|---|
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் | 04343-235655 | dbcwo[dot]tnkgi@nic[dot]in | மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கிருஷ்ணகரி |