மூடு

விவசாய துறை

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்வதற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சீதோசன நிலை மிகவும் உகந்ததாக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதான வேளாண் பயிர்களான நெல், கேழ்வரகு, துவரை, கொள்ளு, நிலக்கடலை, மா மற்றும் தென்னை அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

மழையளவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சராசரயாக 842 மி.மீ மழை ஒவ்வொரு வருடமும் சராசரியாக 59 நாட்கள் பொழிகிறது. சென்ற ஆண்டு 2017-ல் 1,130 மி.மீ பொழிந்தது அதனால் விவசாயிகள் அதிக பரப்பளவில் பயிர்சாகுபடி செய்துள்ளனர்.

பாசனநீர் ஆதாரங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.ஆர்.பி அணை, கெலவரபள்ளி அணை, பாரூர் ஏரி, பாம்பாறு மற்றும் சூளகிரி சின்னாறு இவைகள் அனைத்து வேளாண் பயிர்கள் சாகுபடி செய்வதற்கான பிரதான நீர் ஆதாரங்கள் ஆகும். கே.ஆர்.பி அணையின் மொத்த உயரமான 52 அடியில் 39.05 அடி தண்ணீர் உள்ளது. இதன் வாயிலாக 9,012 ஏக்கர் நிலம் நீர்பாசனம் பெறுகிறது. கெலவரபள்ளி அனையின் மொத்த உயரமான 44.28 அடியில் 41.05 அடி உயரம் தற்போது பாசனநீர் உள்ளது, இதன் வாயிலாக 9,083 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. பாரூர் பெரிய ஏரியின் மொத்த உயரத்தில் 12.90 அடி தண்ணீர் உளளது இதன் மூலம் 2,400 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. பாம்பாறு மற்றும் சூளகிரி சின்னாறுகளிலும் இவ்வாண்டு நல்ல மழை பெய்ததால் நீர் நிரம்பி சுமார் 5,871 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு மூலமாக இந்த பிரதான நீர் ஆதாரங்கள் பாசன நீர் பெறுகிறது. இதன் மூலம் சுமார் 27,695 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

பாசன நீர் ஆதாரங்கள்
வ. எண் அணைகளின் பெயர் மொத்த கொள்ளளவு (அடி) நீர்பாசன பரப்பு (ஏக்கர்)
1 கே.ஆர்.பி அணை 52.0 9012
2 கெலவரப்பள்ளி அணை 44.3 9083
3 பாரூர் ஏரி 15.6 4729
4 பாம்பாறு 19.6 4000
5 சூளகிரி சின்னாறு 32.8 871
பிரதான பயிர்கள் – பயிர் சாகுபடி முறைகள்
வ.எண் பயிர்சாகுபடி நில வகைகள் பயிர் சாகுபடி முறைகள் பருவம்
1 நீர்பாசனம் நிலம் நெல் – நெல் கார, சம்பா, நவரை
2 நீர்பாசனம் நிலம் நெல் – காய்கள்
நெல் – சிறுதானியங்கள்(ராகி)
காய்கள் – பயிறு வகைகள் – காய்கறிகள்
காய்கறி – மலர்கள்
காரிப் ராபி
3 மானவாரி பயிறு வகைகள் (துவரை)
நிலக்கடலை – பயிறுகள்
ராகி – பயிறு வகைகள் (கொள்ளு)
காரிப் ராபி

திருந்திய நெல் சாகுபடி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உணவு பயிரான நெல், 25700 எக்டரில் பயிரிடப்பட்டு, 1.53 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் சாகுபடி செய்வதால், நெல்லில் குறிப்பிடத்தக்க உற்பத்தி கிடைக்கிறது. சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 15600 எக்டரில் திருந்திய நெல் சாகுபடி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது திருந்திய நெல் சாகுபடி முறையில் நவம்பர் மாத முடிய 9000 எக்டரிலும், வரும் நவரை பருவ காலத்தில் 7000 எக்டரிலும் பயிர் செய்யப்படும் சராசரியாக எக்டருக்கு சாதாரண முறையில் 6100 கிலோவும், திருந்திய நெல் சாகுபடி முறையில் 9200 கிலோவும் கிடைக்க பெறுகிறது. மொத்தமுள்ள நெல் சாகுபடிப்பரப்பில் 66 சதவீதம் திருந்திய நெல் சாகுபடி முறை கடைபிடிக்க பல செயல் விளக்கங்கள், பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு மூலம் சிறப்புக் திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறோம்.

திருந்திய பயறு சாகுபடி திட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயறு, துவரை பயறு தனியிடத்தை பிடித்து 12000 எக்டரில் மானாவரி பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், துவரை நாற்று நடவு சாகுபடி முறை ஒரு வெற்றியடைந்த தொழில் நுட்பமாக கடைபிடிக்கப்பட்டு, சாதாரண முறையை காட்டிலும் ஒன்னரை மடங்கு அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த துவரை நாற்று நடவு முறையினால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைப்பதால்,திருந்திய பயறு சாகுபடி முறை முழு அளவில் கடைபிடிக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பச்சைப்பட்டாணி போல, பச்சை துவரை காயாக விற்பதால், விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை ஈட்டி தருகிறது. மேலும், வறுகடலையாகவும், ஊட்டச்சத்து மாவும், பருப்புப்பொடியாக மதிப்பு கூட்டு பொருளாக விற்பனை செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டம

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரும்பின் இயல்பான பரப்பு 950 எக்டர். கரும்பின் சராசரி உற்பத்தி திறன் 85 மெ.ட/எக்டர் ஆகும். கரும்பின் உற்பத்தி திறனை அதிகரிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் சிறப்பு திட்டமான நீடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டம் (SSI) இம்மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2012 – 2013) 40 எக்டேரும், நடப்பு ஆண்டில் 50 எக்டேரும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய தொழில் நுட்பத்தில் ஒரு பருவைக் கொண்ட குழிதட்டு நாற்றங்கால், நீரில் பரவும் உரங்களைக் கொண்டு சொட்டு நீர்ப் பாசனம் மூலம் உரமிடுதல், ஊட்டச் சத்து கலவை மற்றும் களைக்கொல்லி இடுதல் போன்ற இடுபொருட்கள் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதால் 30 – 40% உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுகிறது.

தொலை நோக்கு பார்வை 2023 – சிறுதானியங்கள் ஓர் கண்ணோட்டம்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த வேளாண் பாரம்பரிய பொருட்களை பிரபலம்படுத்துவது என முக்கிய நோக்கமாக மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. சிறுதான்ய உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு தொழில் நுட்பங்கள் மூலம் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சிறுதான்யப் பயிர்களில் முக்கிய பயிராக இராகி பயிர் விளங்குகிறது. மேலும், கம்பு, சோளம், சாமை பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. சிறுதான்ய பரப்பை அதிகரிக்க நடப்பு தரிசான 24180 எக்டர் பரப்பினை, வருடம் தோறும் 10 சதவீதம் என்ற அளவில் சாகுபடி பரப்பாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மொத்த இராகி உற்பத்தியில், உணவுக்கு போக மீதமுள்ள அதிக படியான இருக்கும் இராகியை, மதிப்பு கூட்டு பொருளாக மாற்றுவதே இத்தருணத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணியாகும். ஆதலால் மத்திய சிறப்பு மண்டலம், ராகி பயிருக்கு ஒசூரில் “வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்” மூலம் ரூ.5 கோடி முதலீட்டில் 5 ஏக்கர் பரப்பளவில் 90% சதவீத மத்திய அமைச்சகம் மூலமும் 10% பங்கு தனியார் மூலதனத்துடனும் ஆரம்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உழவர் பயிற்சி நிலையம்

உழவர் பயிற்சி நிலையம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு அவ்வப்போது தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்படும் புதிய தொழில்நுட்பங்கள், புதிய பயிர் இரகங்கள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு கொண்டு செல்லும் பாரமாக திகழ்கிறது. உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் விவசாயிகளுக்கு கிராம அளவிலான 22 பயிற்சியும், உழவர் விவாதக்குழு அமைப்பாளர்களுக்கு 10 பயிற்சியும் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பயிற்சியின் போது விவசாயிகளுக்கு செயல்விளக்கங்களும் செய்து காண்பிக்கப்படுகிறது. முன்னோடி விவசாயிகள் மற்றும் உழவர் விவாதக்குழு அமைப்பாளர்களுக்கு அருகாமையிலுள்ள மண்டல ஆராய்ச்சி நிலையங்களுக்கு கண்டுனர்தல் சுற்றுலாவும், புதிய தொழில்நுட்பத்தை கடைபிடித்து அதிக மகசூல் பெறும் விவசாயி ஒருவருக்கு சிறந்த விவசாயிக்கான பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.

திட்டம்

  1. பிரதம மந்தரி பயிர் காப்பீட்டு திட்டம்
  2. மண்வள அட்டை இயக்கம்
  3. வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா)
தொடர்பு அலுவலர் விவரம்
பெயர் / பதவி தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி முகவரி
வேளாண்மை இணை இயக்குநர்,கிருஷ்ணகிரி 9443906424 jdakrishnagiri2015@mail[dot]com வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், கிருஷ்ணகிரி
வேளாண்மை துணை இயக்குநர்(மா.தி), கிருஷ்ணகிரி 9361112438 jdakrishnagiri2015@mail[dot]com வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், கிருஷ்ணகிரி
வேளாண்மை துணை இயக்குநர்(ம.தி), கிருஷ்ணகிரி 9443006664 jdakrishnagiri2015@mail[dot]com வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், கிருஷ்ணகிரி
வேளாண்மை துணை இயக்குநர் (உபநி), கிருஷ்ணகிரி 9443906424 jdakrishnagiri2015@mail[dot]com வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், கிருஷ்ணகிரி
வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், கிருஷ்ணகிரி agri.pa.krishnagiri@gmail[dot]com வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், கிருஷ்ணகிரி
வேளாண்மை உதவி இயக்குநர்(த.க), கிருஷ்ணகிரி 8072245916 jdakrishnagiri2015@gmail[dot]com வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், கிருஷ்ணகிரி
வேளாண்மை உதவி இயக்குநர், கிருஷ்ணகிரி 8072245916 adakrishnagiri@gmail[dot]com வேளாண்மை விரிவாக்க மையம், கிருஷ்ணகிரி
வேளாண்மை உதவி இயக்குநர்(பொ), காவேரிப்பட்டிணம் 9486448460 adava@gmail[dot]com வேளாண்மை விரிவாக்க மையம், காவேரிப்பட்டிணம்
வேளாண்மை உதவி இயக்குநர், பர்கூர் 9486755252 adabargur@gmail[dot]com வேளாண்மை விரிவாக்க மையம், பர்கூர்
வேளாண்மை உதவி இயக்குநர், வேப்பனப்பள்ளி 9487638100 adaveppanapalli1@gmail[dot]com வேளாண்மை விரிவாக்க மையம், வேப்பனப்பள்ளி
வேளாண்மை உதவி இயக்குநர், மத்தூர் 9940041314 adakrishnagiri@gmail[dot]com வேளாண்மை விரிவாக்க மையம், மத்தூர்
வேளாண்மை உதவி இயக்குநர், ஊத்தங்கரை 9788876876 adakrishnagiri@gmail[dot]com வேளாண்மை விரிவாக்க மையம், ஊத்தங்கரை
வேளாண்மை உதவி இயக்குநர், சூளகிரி 9486755252 adashoolagiri@gmail[dot]com வேளாண்மை விரிவாக்க மையம், சூளகிரி
வேளாண்மை உதவி இயக்குநர், ஓசூர் 9944439331 adahsr@gmail[dot]com வேளாண்மை விரிவாக்க மையம், ஓசூர்
வேளாண்மை உதவி இயக்குநர், கெலமங்கலம் 9442395835 adakmgm@gmail[dot]com வேளாண்மை விரிவாக்க மையம், கெலமங்கலம்
வேளாண்மை உதவி இயக்குநர், தளி 9442630246 adaagrithally@gmail[dot]com வேளாண்மை விரிவாக்க மையம், தளி