மூடு

மானாவாரி நில மேம்பாட்டு ஒருங்கிணைந்த பண்ணைய அமைத்தல்

தேதி : 28/09/2020 - | துறை: தோட்டக்கலை

எக்டர் பரப்பளவில், 50% மானியம் ரூ.60000/- வீதம் வழங்கப்படுகிறது. தேனீ அலகுகள், நிரந்தர மண்புழு உரக்கூடம், நாட்டு கோழி இனங்கள், செம்மறி ஆடுகள், பால் மாடு/எருமை, நடவுச்செடிகள்/விதைகள் வழங்கப்படுகின்றன.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

  • ஒரு பயனாளிக்கு 1 எக்டருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.
  • சிறு விவசாய குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
  • பயனாளி ஏற்கனவே ஒரு பால் மாடு / எருமை வைத்திருந்தால், அவருக்கு கூடுதல் மாடு வழங்கப்படும், அவரிடம் ஏற்கனவே இரண்டு மாடுகள் / எருமைகள் இருந்தால், பயனாளி இத்திட்டத்தை பயன்படுத்த முடியாது.
  • எருமை / மாடு / ஆடு / செம்மறி ஆடு ஆகியவற்றை பயனாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் சொந்த மாவட்டத்திலிருந்தே பெற்றுக்கொள்ளலாம். எருமை / பசுவின் வயது 4 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் ஆடு / செம்மறி ஆடுகளின் வயது 6 முதல் 8 மாதங்கள் வரை இருக்க வேண்டும்.
  • முன்னதாக இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த மாடுகளை மறுபடியும் பயன்படுத்து மானியம் பெற இயலாது.
  •  பயனாளி தவறாது கால்நடைகளை அருகிலுள்ள கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு சென்று தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

  • உழவன் பதிவு மற்றும் HORTNET இன் மூலம் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளை தோ்வு செய்ய வேண்டும்.

பயனாளி:

அனைத்து விவசாயிகளும்

பயன்கள்:

மானியம்

விண்ணப்பிப்பது எப்படி?

உழவன் பதிவு மற்றும் HORTNET இன் மூலம் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளை தோ்வு செய்ய வேண்டும்.