மூடு

பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் கிப்ட் திலேப்பியா மீன்விரலிகள் இருப்பு திட்டம்

| துறை: மீன்வள துறை

உள்நாட்டு மீன்உற்பத்தி கடந்த ஆண்டுகளில் பெரும்பாலும் இந்திய பெருங்கெண்டைகள் மற்றும் இதர வகை சிறு கெண்டைகளை சார்ந்து இருந்து வந்தது.இவ்வகை கெண்டை ரகமீன்கள் நீர்நிலைகளில் முழு வளர்ச்சி அடைய அதிக காலம் எடுக்கும். கிருஷ்ணகிரி மாவட்டத்தினை பொறுத்தமட்டில் நீர்நிலைகள் அனைத்தும் நீர் இருப்பு திறன் கொண்டுள்ளதாலும்,மாவட்டத்தின் மீன் உற்பத்தி திறனினை பெருக்கும் நோக்கத்திலும், தமிழ்நாடு மீன்வளத்துறை குறுகிய காலத்தில் அதிக எடை வளரக்கூடிய கிப்ட் திலேப்பியா மீன்குஞ்சு விரலிகளை கிருஷ்ணகிரி மீன்பண்ணையில் உற்பத்தி செய்து மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதிகள்

மாவட்ட மீன்வள்ர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள்

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள முகமை உறுப்பினர்கள் தங்களது வட்டத்தில் உள்ள மீன்துறை ஆய்வாளர்கள் / சார் ஆய்வாளர்அலுவலகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்களுடன் குடும்ப அட்டை(நகல்), ஆதார் அட்டை(நகல்), வங்கி கணக்கு புத்தகம்(நகல்), நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் நகல் (பட்டா, சிட்டா மற்றும் நில வரைபடம்) ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

திட்டத்தின் தாக்கம்

  • கிப்ட் திலேப்பியா வளர்ப்பு மூலம் குறைந்த காலத்தில் நிறைந்த லாபமும், மாவட்டத்தின் மீன்உற்பத்தியும் அதிகரிக்கலாம்.
  • கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளுக்கு குறைந்த விலையில் ஊட்டச்சத்து மிகுந்த உணவினை வழங்கலாம்.

பயனாளி:

மாவட்ட மீன்வள்ர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்

பயன்கள்:

பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் கிப்ட் திலேப்பியா மீன்விரலிகள் இருப்பு