மூடு

விலையில்லா மிதிவண்டிகள் வழங்குதல்

| துறை: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்

மேல்நிலைப் படிப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக நிதி உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பகளைச் சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் உரிய பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

அரசு மற்றம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் பெறத் தகுதி பெற்றவர்கள்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

தமிழக அரசால் வழங்கப்படும் மிதிவண்டிகள் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது

பயனாளி:

11 ஆம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள்

பயன்கள்:

விலையில்லா மிதிவண்டிகள்