பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (கிராமின்)
| துறை: கிராமப்புற வளர்ச்சி
- இத்திட்டத்தில் 60% விழுக்காடு மத்திய அரசு நிதி 40% விழுக்காடு மாநில அரசு நிதி என்ற விகிதத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது ஒரு மத்திய அரசு திட்டமாகும்.
- ஊரக பகுதியில் 2022-க்குள் வீடுகள் இல்லாதவர்களுக்கும் மற்றும் பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டி தருவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- வீடுகள் கட்ட தேவையான நிலப்பரப்பு 269 சதுரடி இருக்க வேண்டும்.
- மொத்த மதிப்பீடு ரூ.170000 ஆகும். இதில் மத்திய அரசு நிதி (ரூ.72,000) + மாநில அரசு நிதி (ரூ.48,000) + மேற்கூரை அமைக்க மாநில கூடுதல் நிதி (ரூ.50,000).
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.12,000/- மதிப்பிலான கழிப்பறை கட்டிதரப்படுகிறது.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழான மனிதசக்தி நாட்களை கொண்டு 90 நாட்களுக்கு வீடு கட்டப்படுகிறது. (90 X ரூ.205 = ரூ.18450)
- சமூக பொருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பின் மூலம் வீடு இல்லாதவர்களை கண்டறிந்து அதன் மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
பயனாளிகளின் தகுதிகள்
- வீடு இல்லாத பயனாளிகள்.
- ஆதரவற்ற கைவிடப்பட்டவர்கள் மற்றும் பிச்சை பெறுபவர்கள்.
- மனித கழிவுகளை கையால் எடுத்து அப்புறப்படுத்துபவர்கள்.
- புராதான மலைவாழ் மக்கள்.
- சட்டபூர்வமாக விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள்.