மூடு

பிரதான் மந்திரியின் வேளாண்மை நுண்ணிர் பாசன திட்டம்

தேதி : 28/09/2020 - | துறை: தோட்டக்கலைபிரதான் மந்திரியின் வேளாண்மை நுண்ணிர் பாசன திட்டம்

இந்தத் திட்டத்தின் கீழ், பாசன நீரை திறம்பட பயன்படுத்துவதை வலியுறுத்துவதற்காக, நுண்ணீா் பாசனம் அமைப்பதை ஊக்குவிக்கவும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்குவதன் மூலம் நுண்ணீா் பாசன வசதியை அமைக்க விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு பயனாளி 5 எக்டர் வரை நிதி உதவி பெற முடியும். ஏற்கனவே பயனடைந்த விவசாயிகள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதுப்பித்து மானியத்தையும் பெறலாம்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

  • மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து நுண்ணிர்ப்பாசன திட்டத்தின் கீழ் பயனாளிக்கு கிடைக்கும் மொத்த நிதி உதவி, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 55% மற்றும் பிற விவசாயிகளுக்கு 45% ஆகும்
  • ஒரு பயனாளிக்கு 5 எக்டருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.
  • ஒரு முறை மானிய சலுகைகளைப் பெற்றுள்ள பயனாளிகள், அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு மானியம் பெற இயலாது
  • ஒரு பயனாளி தனது பயிர் இடைவெளியில் ஒன்றுக்கு மேற்பட்ட பயிர்களைக் கொண்டிருந்தால், அதற்கேற்ற சொட்டு நீர்ப்பாசன முறையை நிறுவ மானியம் கிடைக்கும்

பயனாளி:

அனைத்து விவசாயிகளும்

பயன்கள்:

நிதி உதவி

விண்ணப்பிப்பது எப்படி?

பின்வரும் ஆவணங்களுடன் உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்
சிட்டா மற்றும் அடங்கல் (அசல்)
நில வரைபடம் நகல்
ஆதார் அட்டை நகல்
மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கைகள்
சிறு மற்றும் குறு விவசாயிகள் அதற்கான (SF/MF) சான்றிதழ் .
குத்தகை நிலம் உள்ள விவசாயிகள் 7 ஆண்டுக்களுக்கான தண்ணீர் மற்றும் நில குத்தகை ஆவணத்தை வழங்க வேண்டும்.
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் (3 எண்கள்)