மூடு

பால் ஸ்வஷ்திய காரியகரம்

தேதி : 30/04/2015 - | துறை: சுகாதாரம்

ராஷ்ட்ரிய பால் ஸ்வஷ்திய காரியகரம் என்ற திட்டம் ஏப்ரல் 2015-ஆம் வருடம் மத்திய அரசால் நிருவப்பட்டது.இத்திட்டத்தின் நோக்கமானது பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து ஆரம்ப நிலையில் உள்ள நோயினை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே ஆகும்.

இப்பரிசோதனை நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டு மேல் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.

  1. பிறவிக்குறைபாடு
  2. சத்துக்குறைபாடு
  3. நோய்கள்
  4. வளர்ச்சிக்குறைபாடு

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தை பிறந்தவுடன் முதல் நிலை பரிசோதனையானது மருத்துவ அலுவலர், சுகாதார செவிலியர் மற்றும் துனை செவிலியரால் பரிசோதிக்கப்படுகிறது. வீட்டளவிலான குழந்தைகள் பராமரிப்புத் திட்டத்தின்கீழ் (HBNC) குழந்தை பிறந்து 48 மணி நேரம் முதல் 6 வாரம் வரை ஆஷா (ASHA) பணியாளர்களால் வீடு வீடாக சென்று மருத்துவ சேவையளிக்கப்படுகிறது.

நமது கிருஷ்ணகிரி சுகாதார மாவட்டத்திற்கு உட்பட்ட 10 வட்டாரத்தில் 20 நடமாடும் பள்ளி சுகாதார குழு உள்ளன. இச்சுகாதார குழு மூலம் 0 முதல் 18 வயதுவரை உள்ள 3 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர்.

முன் பயன திட்டத்தின்படி வருடத்திற்கு இரண்டு முறை அங்கன்வாடி மையங்களுக்கும் மற்றும் ஒரு முறை பள்ளிகளுக்கும் சென்று குழந்தைகளுக்கு மருத்துவ சேவையளிக்கப்படுகிறது.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

இலவசமக சிகிச்சை, பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பெருவது. இலவச சிகிச்சை பெருவதற்கு முதலமைச்சர் காப்பிட்டு திட்ட அட்டை வைத்திருக்க வேண்டும்.முதலமைச்சரின் காப்பிட்டு திட்டம் அட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்படுகிரது. எடுத்து வரவேண்டிய ஆவணங்கள், ஆதார் கார்டு மற்றும் குடும்ப அட்டை.

பயனாளி:

பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள்

பயன்கள்:

இலவசமக சிகிச்சை, பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பெருவது