மூடு

தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கதில் புதிய மகளிர் சுய உதவி குழுக்களை அமைத்து நிலைபடுத்துதல்

| துறை: மகளிர் திட்டம்

நகர்புற ஏழை மகளிரை கொண்டு சுய உதவி குழுக்களை அமைத்தல். அவ்வாறு அமைக்கப்படும் மகளிர் சுய உதவி குழு. உறுப்பினர்களுக்கு பயிற்சிகளை அளித்தல். அக்குழுக்களுக்கு சுழல் நிதி ரூ 10,000/- வழங்குதல். அக்குழுக்களுக்கு தொழில் தொடர்ந்து நடத்த வங்கி கடன் பெற உதவிடுதல்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

  • குறைந்தபட்டம் 12 முதல் 20 நபர்களை கொண்டு குழுக்களை அமைக்க வேண்டும்.
  • 70% மகளிர் நகர்புற ஏழைகளாக இருக்க வேண்டும்
  • மாற்று திறனாளிகளை கொண்டு அமைக்கப்படும் குழுக்களில் 5 நபர்கள் இருந்தால் போதுமானது

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

தகுதியுடைய நபர்கள் நகர்புற சமூக அமைப்பாளர்களை தொடர்பு கொண்டால் அவர்கள் மகளிர் சுய உதவிக்குழு அமைத்து வங்கி கணக்கு துவக்கி, சுழல் நிதி மற்றும் வங்கி கடன் பெற உதவிடுவார்கள்.