மூடு

தீன் தயாள் உபாத்யாயா ஊரக திறன் மேம்பாட்டு திட்டம்

| துறை: மகளிர் திட்டம்

கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து பொருளாதார மேம்பாடு அடைய செய்து சுதந்திரமாகவும், உலகளவிலும் அவர்கள் பணிபுரிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதே இத்திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும். இத்திட்டம் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஓர் அங்கமாகும்.

கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கிராமங்களிலுள்ள ஏழை குடும்பங்களை சார்ந்த படித்த வேலையற்ற இளைஞர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றுக் கொள்ளலாம்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

  • கிராமப்புற ஏழை குடும்பங்களை சார்ந்த இளைஞர்கள் வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை
  • பெண்களுக்கு 40 வயது வரையிலும் மற்ற பழங்குடி இனத்தவருக்கு 45 வயது வரையிலும் சலுகை உண்டு
  • கல்வித் தகுதி குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் செய்யப்படும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலம் இலக்கு மக்கள் குடும்பங்களை சார்ந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் சமூக பொருளாதார பிரிவின் கீழ் உள்ள குடும்பங்களை சார்ந்த இளைஞர்கள் அனைவரும் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளில் செயல்படும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் தங்களின் பெயர்களை பதிவு செய்து பயன் பெறலாம்.