மூடு

அம்மா இருசக்கர வாகனத்திட்டம்

| துறை: மகளிர் திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள உழைக்கும் மகளிர் தங்களது பணிக்கு உதவிடும் வகையில் பெண்கள் பயன்படுத்தும் வகையில் இரு சக்கர வாகனத்தை 50% மானியத்தில் வாங்கிட உதவும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

  • 18 வயது முதல் 40 வயது வரை உள்ள தமிழ்நாட்டில் வசிக்கும் மகளிர் இத்திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவர் ஆவர்.
  • இருசக்கர வாகனம் ஒட்டுவதற்கான உரிமம் / பழகுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- மிகாதிருக்க வேண்டும்.
  • 8-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
  • மலை பகுதியில் வசிப்போர், பெண்களை தலைவராக கொண்ட குடும்பம்,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுதிறனாளி பெண்கள், 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர் மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

  • விண்ணப்பங்களை இணையதளத்திலும் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / பேரூராட்சி அலுவலகங்களிலும் அளிக்க வேண்டும்.
  • கள விசாரணையின் அடிப்படையில் தகுதி மற்றும் முன்னுரிமையின் படி விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்டு மாவட்ட அளவிலான பயனாளிகள் தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படும்
  • தேர்வு பெற்ற விவரம் பயனாளிகளுக்கு அறிவிப்பு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.
  • அதன் பின்னர் பயனாளி தனது சொந்த செலவில் வங்கி நிதி நிறுவனகளில் இருசக்கர வாகனம் வாங்கிட வேண்டும்
  • வாங்கிய இருசக்கர வாகன ஆவணங்களை உரிய படிவத்துடன் சமாப்பிக்கும் நேரில் வாகன விலையில் 50% அல்லது ரூ.25000/- இதில் எது குறைவோ அத்தொகை பயனாளியின் வங்கி கணக்கில் ஈடு செய்யப்படும்.