தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை
சேவை வகை வாரியாக வடிகட்டி
ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு திட்டம்
சிறு பழ பயிர்கள்: (ரம்புட்டான், லிச்சி, பெர்சிமோன், அவகாடோ, கிவி, பேஷன் பழம் போன்றவை) ஒரு எக்டருக்கு ரூ.30000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது. பாரம்பரிய பழம் மற்றும் காய்கறி சாகுபடி திட்டம், ஒரு எக்டருக்கு ரூ.15000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது. வறண்ட நில பயிர்கள் (நாவல், நெல்லி, புளி, முதலியன) ஒரு எக்டருக்கு ரூ.20000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது. காய்கறி விதை கிட் விநியோகம் (கத்திரிக்காய், வெண்டைக்காய், முருங்கை, பாகற்காய், தக்காளி, கொத்தவரை), ஒரு கிட்டுக்கு ரூ.10 மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு 6 கிட்டுகள் வீதம் வழங்கப்படுகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் இத்திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும்…
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம்
வெங்காய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு எக்டருக்கு ரூ.20000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது. பந்தல்: நிரந்தர பந்தல் கட்டமைப்பை அமைக்க ஒரு எக்டருக்கு ரூ.200000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது. இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல்: கீரை வகைகளுக்கு ஒரு எக்டருக்கு ரூ.2500-ம், வெண்டைக்காய், கத்திரிக்காய் மற்றும் தக்காளிக்கு ஒரு எக்டருக்கு ரூ.3750-ம், முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர்-க்கு ஒரு எக்டருக்கு ரூ.5000-ம் மானியமாக வழங்கப்படுகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் இத்திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் தகுதியானவா்கள். ஆனால் SF/MF/SC/ST/பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விவசாயிகளுக்கு சொந்தமான நிலம் / குத்தகைக்கு விடப்பட்ட நிலம் (10 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை) இருக்க வேண்டும்….
மானாவாரி நில மேம்பாட்டு ஒருங்கிணைந்த பண்ணைய அமைத்தல்
எக்டர் பரப்பளவில், 50% மானியம் ரூ.60000/- வீதம் வழங்கப்படுகிறது. தேனீ அலகுகள், நிரந்தர மண்புழு உரக்கூடம், நாட்டு கோழி இனங்கள், செம்மறி ஆடுகள், பால் மாடு/எருமை, நடவுச்செடிகள்/விதைகள் வழங்கப்படுகின்றன. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் ஒரு பயனாளிக்கு 1 எக்டருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். சிறு விவசாய குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பயனாளி ஏற்கனவே ஒரு பால் மாடு / எருமை வைத்திருந்தால், அவருக்கு கூடுதல் மாடு வழங்கப்படும், அவரிடம் ஏற்கனவே இரண்டு மாடுகள் / எருமைகள் இருந்தால், பயனாளி இத்திட்டத்தை பயன்படுத்த முடியாது. எருமை / மாடு / ஆடு / செம்மறி ஆடு ஆகியவற்றை…
புதுப்பிக்கப்பட்ட பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உருளைக்கிழங்கு, வாழைப்பழம், கத்திரிக்காய், மஞ்சள், முட்டைக்கோஸ், தக்காளி, மா, சிவப்பு மிளகாய் ஆகிய பயிர்களுக்கு காப்பீட்டு திட்டமானது RPMFBY கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்தால் இயற்கை பேரழிவுகள் காரணமாக பயிர் சேதங்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்கும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட கிராமங்களுக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (RPMFBY) கவனம் செலுத்தப்பட்டது. மா பயிர்களுக்கு கிருஷ்ணகிரி, காவேரிபட்டினம், கெலமங்கலம், ஓசூர், பர்கூர், ஊத்தங்கரை, சூளகிரி, தளி, வேப்பனபள்ளி மற்றும் மத்தூர் வட்டாரங்களும், வாழை பயிர்களுக்கு காவேரிப்பட்டிணம் மற்றும் வேப்பனப்பள்ளி வட்டாரங்களும், உருளைகிழங்கு பயிர்களுக்கு கெலமங்கலம்,…
கூட்டு பண்ணையம்
கூட்டு பண்ணையத்தின் கருத்து என்னவென்றால், ஒரு சிறிய பகுதியில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளை அடையாளம் கண்டு 20 விவசாயிகளுடன் விவசாயிகள் ஆா்வலா் குழுக்கள் (FIG) அமைப்பது. 5 FIG கள் 100 விவசாயிகளுடன் உழவர் உற்பத்தியாளர் குழுவில் (FPG) ஒருங்கிணைக்கப்படும். கூட்டு சாகுபடி, கடன் வசதிகள் மற்றும் சந்தை இணைப்புகளை அணுக உள்ளீடுகளை கூட்டாக வாங்குவது போன்றவற்றை FIG மற்றும் FPG ஊக்குவிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 150 FIG-கள் மற்றும் 30 FPG-கள் கூட்டு விவசாயத்தை மேம்படுத்துவதற்காக 2020-21 நிதியாண்டில் உருவாக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் FPG-யின் திட்ட அமலாக்கத் திட்டத்தின் ஒப்புதலுக்குப் பிறகு ஒவ்வொரு…
பிரதான் மந்திரியின் வேளாண்மை நுண்ணிர் பாசன திட்டம்
இந்தத் திட்டத்தின் கீழ், பாசன நீரை திறம்பட பயன்படுத்துவதை வலியுறுத்துவதற்காக, நுண்ணீா் பாசனம் அமைப்பதை ஊக்குவிக்கவும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்குவதன் மூலம் நுண்ணீா் பாசன வசதியை அமைக்க விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு பயனாளி 5 எக்டர் வரை நிதி உதவி பெற முடியும். ஏற்கனவே பயனடைந்த விவசாயிகள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதுப்பித்து மானியத்தையும் பெறலாம். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து நுண்ணிர்ப்பாசன திட்டத்தின் கீழ் பயனாளிக்கு கிடைக்கும் மொத்த நிதி உதவி, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 55%…
ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம்-தேசிய தோட்டக்கலை இயக்கம்
புதிய பரப்பு விரிவாக்க திட்டம் கலப்பின காய்கறிகளின் சாகுபடி (தக்காளி) – அரசு தோட்டக்கலை பண்ணைகளில் குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ரூ.20000/எக்டா் வீதம் மானியமாக வழங்கப்படுகிறது. அடா் நடவு மா சாகுபடி – ஒரு எக்டருக்கு ரூ. 9840/-. மலர் பயிர் சாகுபடி: சாமந்தி பயிரிட ஒரு எக்டருக்கு ரூ. 16000/- மற்றும் சம்பங்கி சாகுபடிக்கு பின்னேற்பு மானியத் தொகை விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு ரூ.60000/- வீதம் வழங்கப்படுகிறது. மிளகாய் சாகுபடி- ஒரு எக்டருக்கு ரூ.12000/- வீதம் வழங்கப்படுகிறது. கொய் மலர் சாகுபடி- ஒரு எக்டருக்கு ரூ. 40000/-வீதம் பட்டியலினத்தவா் பெண்களுக்கு மற்றும் ஒரு எக்டருக்கு…