மூடு

மீன்வள துறை

சேவை வகை வாரியாக வடிகட்டி

வடிகட்டி

நீலப்புரட்சி திட்டம்-மீன்பண்ணைகள் புதுப்பித்தல் மற்றும் புணரமைத்தல் திட்டம்

மீன்கள் எளிதில் செரிக்ககூடிய மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும் புரதம் நிறைந்த அற்புத உணவாகும். சூற்றுச்சூழல் மாசு மற்றும் அதிக மீன்பிடிப்பு காரணமாக இயற்கை நீர்நிலைகளில் மீன்களின் இருப்பு விகிதம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இந்நிலையினை எதிர்கொள்ள வேண்டி நீலப்புரட்சி 2020 என்ற திட்டம் மூலம்,ஒருங்கிணைந்த மீன்வளர்ப்பு முறை மற்றும் நீர்நிலைகளை ஆக்கபூர்வமாகவும், மீன்விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும் நிலையான மற்றும் பாதுகாப்பான மீன்வளர்ப்பு முறையினை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதிகள் மாவட்ட மீன்வள்ர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள முகமை உறுப்பினர்கள்…

வெளியிடப்பட்ட தேதி: 01/06/2018
விவரங்களை பார்க்க

பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் கிப்ட் திலேப்பியா மீன்விரலிகள் இருப்பு திட்டம்

உள்நாட்டு மீன்உற்பத்தி கடந்த ஆண்டுகளில் பெரும்பாலும் இந்திய பெருங்கெண்டைகள் மற்றும் இதர வகை சிறு கெண்டைகளை சார்ந்து இருந்து வந்தது.இவ்வகை கெண்டை ரகமீன்கள் நீர்நிலைகளில் முழு வளர்ச்சி அடைய அதிக காலம் எடுக்கும். கிருஷ்ணகிரி மாவட்டத்தினை பொறுத்தமட்டில் நீர்நிலைகள் அனைத்தும் நீர் இருப்பு திறன் கொண்டுள்ளதாலும்,மாவட்டத்தின் மீன் உற்பத்தி திறனினை பெருக்கும் நோக்கத்திலும், தமிழ்நாடு மீன்வளத்துறை குறுகிய காலத்தில் அதிக எடை வளரக்கூடிய கிப்ட் திலேப்பியா மீன்குஞ்சு விரலிகளை கிருஷ்ணகிரி மீன்பண்ணையில் உற்பத்தி செய்து மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதிகள் மாவட்ட மீன்வள்ர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். திட்டத்தின் பயனை…

வெளியிடப்பட்ட தேதி: 01/06/2018
விவரங்களை பார்க்க

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் (வலை மற்றும் பரிசல்) மீன்பிடி உபகரணங்கள் வழங்குதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உள்நாட்டு மீனவர் / மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் பொருட்டும், அவர்களின் வருமானத்தினை அதிகப்படுத்தும் எண்ணத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 12 மீனவர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த சுமார் 5000 மீனவர்களுக்கு வலை மற்றும் பரிசல்கள் 50 சதவீதம் மான்யத்தில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதிகள் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தினை சார்ந்த பயனாளிகள், அந்தந்த வட்டத்தில் உள்ள மீன்துறை ஆய்வாளர்கள் / சார் ஆய்வாளர்களை நேரில் சென்று…

வெளியிடப்பட்ட தேதி: 01/06/2018
விவரங்களை பார்க்க