ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு

தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கீழ் இயங்கும் கிருஷ்ணகிரி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் 1 தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பணியிடத்திற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

06/10/2026 30/10/2026 பார்க்க (970 KB)
கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU) POCSO சட்டத்தின் கீழ்,மதிப்பூதிய அடிப்படையில் ஆதரவு நபர்களை தேர்வு செய்தல்

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU), பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது தேவையான ஆதரவு மற்றும் உதவிகளை வழங்குவதற்காக 20 ஆதரவு நபர்கள் (Support Persons), 3 ஆண்டுகள் காலத்திற்கு மதிப்பூதிய அடிப்படையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

30/09/2026 15/10/2026 பார்க்க (47 KB) Application Form (2 MB)
கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில (DCPU) மாவட்ட போதை ஒழிப்பு மையத்தை (DDAC) அமைத்து செயல்படுத்துவதற்கான விண்ணப்பங்கள் தகுதியுடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU), மாவட்ட போதை ஒழிப்பு மையத்தை அமைத்து செயல்படுத்துவதற்கான விண்ணப்பங்கள் (DDAC) தகுதியுடைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

30/09/2026 20/10/2026 பார்க்க (56 KB)