வேளாண்மை விற்பனை
துறையின் செயல்பாடுகள்
- விளை பொருள் குழுக்கள் அமைத்து, அதன் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல்
- வேளாண் விளை பொருட்களை தரம் பிரித்து, விளை பொருட்களுக்கு நல்ல் விலை கிடைக்க ஏற்பாடு செய்தல்
- அறுவடை பின் செய் தொழில்நுட்ப பயிற்சி அளித்து, அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பீட்டைத் தடுத்தல்
- தரம் பிரித்தல், சந்தைப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல் ஆகியவற்றின் பயன்கள் குறித்து பயிற்சிகள், விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
- நவீன குளிர்பதனக் கிடங்குகள் அமைத்து, விளை பொருட்களை சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும் சமயத்தில் விற்பனை செய்ய வழிவகை செய்தல்
- வேளாண் விளை பொருட்கள விற்பதற்கும், வாங்குவதற்கும் வசதியாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை நிறுவுதல்
- ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருப்புவைக்கும் விளை பொருட்குளுக்கு பொருளீட்டுக் கடன் வழங்குதல்
- உழவர் சந்தை பணிகள்
காய்கறி பழங்கள் மற்றும் இதர அழுகும் பொருட்களுக்கான தொடர் விநியோக மேலாண்மை திட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காய்கறி மற்றும் பழ பயிர்கள் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. காய்கறி மற்றும் பழங்கள் வீணாவதை தடுக்கவும், விவசாயிகள் அதிக லாபம் பெறும் நோக்கத்திலும், விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் அனைத்து கட்டுமான வசதிகளை உள்ளடக்கிய தொடர் விநியோக மேலாண்மைத் திட்டம் சந்தைப்படுத்துவதற்கும் வழிவகுக்குகிறது.
உழவர் சந்தை
சிறு மற்றும் குறு விவசாயிகளின் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்யவும், நுகர்வோர் வெளிச்சந்தையை விட குறைந்த விலையில் விளைபொருட்களை வாங்கவும் ஏற்பாடு செய்தல்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கீழ்கண்ட உழவர் சந்தைகள் செயல்பாட்டில் உள்ளன
- கிருஷ்ணகிரி
- ஓசூர்
- ஆவலப்பள்ளி
- தேன்கனிக்கோட்டை
பெயர் / பதவி | தொடர்பு எண் | மின்னஞ்சல் முகவரி | முகவரி |
---|---|---|---|
வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) | – | ddab[dot]krishnagiri@gmail[dot]com | ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம், 57, அம்சா உசேன் தெரு, புதுப்பேட்டை, கிருஷ்ணகிரி – 635 001. |