மீன்வள துறை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை மற்றும் மார்கண்டேய நதி இரண்டும் மாவட்டத்திற்கான நீர்த்தேவையினை பூர்த்தி செய்கின்றது.இவ்விரு நதிகளுடன் இணைந்து காவிரி நதியும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பயன் தருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தினை பொறுத்தவரையில் 5 முக்கிய நீர்த்தேக்கங்கள்,பாசன நீர்நிலைகள் மற்றும் ஏரிகள் உள்ளன.மேற்கூரிய நீர்வள ஆதாரங்களை கொண்டு கடந்த 05.10.2005 ஆம் ஆண்டு, மாவட்டத்தில் மீன்துறையானது தனது பணியினை மீன்துறை உதவி இயக்குநர் மற்றும் சார்நிலை அலுவலகங்கள் வாயிலாக செயல்படுத்த தொடங்கியது.
மீன்வள மேம்பாட்டு நடவடிக்கைகள் [1.25 MB]
கிருஷ்ணகிரி மாவட்டத்தினை பொறுத்தமட்டில்,கிருஷ்ணகிரி மீன்குஞ்சு விரலிகள் மையம், கிருஷ்ணகிரி வட்டத்திலும், பாம்பாறு மீன்குஞ்சு விரலிகள் மையம், ஊத்தங்கரை வட்டத்திலும், கெலவரப்பள்ளி மீன்குஞ்சு விரலிகள் மையம்,ஓசூர் வட்டத்திலும் உள்ளன.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கீழ்காணும் 12 மீனவர் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 5173 மீனவர்கள் உள்ளனர்.
- கிருஷ்ணகிரி மீனவர் கூட்டுறவு சங்கம்
- கிருஷ்ணகிரி மீனவ மகளிர் மீனவர் கூட்டுறவு சங்கம்
- ஓசூர் மீனவர் கூட்டுறவு சங்கம்
- சூடாபுரம் மீனவர் கூட்டுறவு சங்கம்
- காவேரிப்பட்டிணம் மீனவர் கூட்டுறவு சங்கம்
- பிலிக்குண்டு மீனவர் கூட்டுறவு சங்கம்
- நாகனூர் மீனவர் கூட்டுறவு சங்கம்
- தளி மீனவர் கூட்டுறவு சங்கம்
- ஊத்தங்கரை மீனவர் கூட்டுறவு சங்கம்
- ஆனந்தூர் மீனவர் கூட்டுறவு சங்கம்
- இராயக்கோட்டை மீனவர் கூட்டுறவு சங்கம்
- தேன்கனிக்கோட்டை மீனவர் கூட்டுறவு சங்கம்
இவ்வலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்
- தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் (வலை மற்றும் பரிசல்) மீன்பிடி உபகரணங்கள் வழங்குதல்
- பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் கிப்ட் திலேப்பியா மீன்விரலிகள் இருப்பு திட்டம்
- நீலப்புரட்சி திட்டம்-மீன்பண்ணைகள் புதுப்பித்தல் மற்றும் புணரமைத்தல் திட்டம்
பெயர் / பதவி | தொடர்பு எண் | மின்னஞ்சல் முகவரி | முகவரி |
---|---|---|---|
மீன்துறை ஆய்வாளர் | 9943936243 | adfkrishnagiri1@gmail[dot]com | கிருஷ்ணகிரி மீன்பண்ணை, கிருஷ்ணகிரி |
மீன்துறை ஆய்வாளர் | 9384824261 | adfkrishnagiri1@gmail[dot]com | பாம்பாறு மீன்பண்ணை,ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி |