மூடு

அனைவருக்கும் கல்வி இயக்கம்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் நோக்கமானது, 6 முதல் 14 வயது வரையான அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ள மற்றும் தொடா்புடைய தொடக்க கல்வியினை வழங்குவது ஆகும். அதற்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் நன்கு வரையறுக்கப்பட்ட நோக்கங்களை கொண்டள்ளது. பள்ளிகளின் பள்ளி வளா்ச்சித் திட்டத்தில், சமுதாயப் பங்கீட்டினை அதிகரிப்பதன் மூலம், சமூக, பிராந்திய மற்றும் பாலின இடைவெளியின குறைக்கும் பாலமாக இருப்பது அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மற்றொரு நோக்கமாகும்.

இலக்குகள்

  1. அனைத்து பள்ளி வயது குழந்தையையும் சோ்த்து, 8-ம் வகுப்பு முடிக்க வைத்தல்.
  2. தரமாக கல்வி வழங்குதல்
  3. சமூக, பாலின இடைவெளியினை அகற்றுதல்
  4. பள்ளியில் சோ்க்கப்பட்ட அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் தக்க வைத்தல்

நோக்கங்கள்

6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ள மற்றும் தொடா்புடைய தொடக்க கல்வியானது, மாணவா் எளிதில் அணுகும் வகையில் பள்ளி அமைத்து தருவது மற்றும் பள்ளியில் சேர்ந்த அனைத்து மாணவரையும் பள்ளியில் தக்க வைப்பது, சமூக, பாலின இடைவெளியினை அகற்றுவது மற்றும் தரமான கல்வி வழங்குவதன் மூலம் மாணவரின் கற்றல் விளைவுகளை மேம்படுத்துதல் போன்றவற்றை உறுதி செய்வது அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

  • 100 சதவீத சோ்க்கையினை உறுதி செய்தல்.
  • இடைநிற்றலின்றி பள்ளியில் சேர்த்த அனைத்து குழந்தைகளையும் தக்க வைத்தலை உறுதி செய்தல்.
  • பள்ளிகளில் தரமான கல்வியினை வழங்குதல்.
  • மாற்றுத் திறனாளி, பொருளாதாரத்தில் பின் தங்கிய, பிற சூழலிருந்து வரும் அனைத்து குழந்தைகளுக்கும் உகந்த கற்றல் சூழ்நிலையினை உருவாக்கி தருதல்.
  • தரமான கல்வி வழங்க பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருதல்.

நடவடிக்கைகள்

  • புதிய தொடக்க பள்ளிகள் மற்றம் இடைநின்ற பள்ளி வயதுக் குழந்தைகளுக்காக சிறப்பு பயிற்சி மையங்கள் தொடங்குதல்.
  • தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்துதல்.
  • புதிய வகுப்பறைக் கட்டிடங்கள், கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் பிற வசதிகளை செய்து தருதல்.
  • பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை பழுது பார்த்து பராமரித்தல்.
  • கற்றல் கற்பித்தல் உபகரணங்களை புதிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்குதல்.
  • ஆசிரியருக்கு பணியிடைப் பயிற்சி வழங்குதல்.
  • வருடாந்திர பள்ளி மானியம், பராமரிப்பு மானியம் மற்றும் ஆசிரியா் மானியம் வழங்குதல்.
  • மாற்றுத் திறனாளி மாணவருகளுக்கான உள்ளடங்கிய கல்வி வழங்குதல்.
  • ஆராய்ச்சி, மதிப்பீடு, கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையிடுதல்.
  • ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்களுக்கான புதுமை செயல்பாடுகள், பெண்கல்வி, அங்கன்வாடி மற்றும் கணினி வழிக் கல்வி வழங்குதல்.
  • இடைநின்ற மாணவரை முறையான கல்வித்திட்டத்தில் இணைத்தல்.
  • எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக்கற்றல் மற்றும் படைப்பாற்றல் கல்வி முறையினை வலியுறுத்தி தரமான கல்வி வழங்குதல்.
தொடர்பு அலுவலர் விவரம்
பெயர் / பதவி தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி முகவரி
மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலா், கிருஷ்ணகிரி 9788858719 ssakrishnagiri@gmail[dot]com, ssakrishnagiri@rediffmail[dot]com மாவட்ட திட்ட அலுவலகம், அனைவருக்கு கல்வி இயக்கம்,கிருஷ்ணகிரி மாவட்டம்