மூடு

பரிசுத்த இடங்கள்

சந்திர சூடேஸ்வர் கோவில்

சந்திரசூடேஸ்வரர் கோவில் (சிவன் கோவில்) ஓசூர் மாநகரில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ள திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் சிவபெருமான் அருள்மிகு மரகதாம்பாள் சமயோதிதராக (ஸ்ரீ சந்திரசூடேஸ்வராக காட்சியளிக்கிறார்) இக்கோவில் தேசிய நெடுஞ்சாலை-7க்கு அருகாமையில் அமைந்துள்ளது. பெங்களுரில் இருந்து 50 கி.மீ தொலைவிலும் கிருஷ்ணகிரியில் இருந்து 42 கி.மீ தெலைவிலும் அமைந்துள்ளது. அருகாமையில் கர்நாடகா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளது. இக்கோவில் மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி கோவில் போல் அமைந்துள்ளது. இக்கோவில் 11ஆம் நூற்றாண்டு சோழர்கள் கால கல்வெட்டு காணப்படுகிறது. முதலாம் இராஜராஜசோழன், குலோத்துங்கசோழன் ஆகியோரை பற்றிய அரிய தகவல்கள் உள்ளது.

சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இத்திருவிழா மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இவ்விழாவினை காண அருகில் உள்ள மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்கில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.

பாஸ்வா பத்மாவதி சக்தி பீடம்

ஜைன மத துறவியான ஸ்ரீசுவாமி பாஸ்வ நாத பகவான் 24வது தீர்தங்கரர் அவதாரங்களில் 23வது அவதாரமாக சக்தி வடிவமாக இங்கு காட்சி அளிக்கிறார். இந்த சக்தி பீடம் உலகில் உள்ள அதிக உயரம் உள்ள சிலைகளை கொண்ட ஜெயின் கோவிலாக திகழ்கிறது. இக்கோவில் கொடியேற்ற விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அவற்றில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வருகை புரிகின்றனர்.

அனுமன் தீர்த்தம்

அனுமன் தீர்த்தம் என்னும் புண்ணிய தலம் ஊத்தங்கரையில் இருந்து 10 கி.மீ தொலைவிலும், கிருஷ்ணகிரியில் இருந்து 70 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோவில் தெண்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. வருகை புரியும் பக்தர்கள் அனுமன் தீர்த்த்தில் நீராடி விட்டு தீர்த்தமலைக்கு வழிபட செல்வது வழக்கம். இதிகாச காலத்தில் இராமன் தீர்த்தமலையில் வழிபட கங்கை தீர்த்தம் கொண்டு வர அனுமனுக்கு பணிக்கப்பட்டது. ஆனால் குறித்த நேரத்திற்குள் அனுமன் கங்கை தீர்த்தத்தை கொண்டு வர இயலாத காரணத்தினால் இராமன் அஸ்த பிரயாகம் செய்து வழிபாட்டை நிறைவு செய்தார். காலதாமதமாக வந்த அனுமன் கோபம் கொண்டு தன் கையில் இருந்த கங்கா தீர்த்தத்தை கொட்டினார். அதுவே இன்றைய அனுமன் தீர்த்தமாக மாறியுள்ளது. என்று புராண கால கதைகள் கூறுகிறது. அந்த அனுமன் தீர்த்தத்தில் இன்றளவும். புஜை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவிழா ஜீலை – ஆகஸ்ட் (மாதங்களிலும்) அனுமன் பிறந்தநாள் விழா டிசம்பர் மாதங்களிலும் நடைபெறுவது வழக்கம் அப்பொழுது ஆயிரக்கணக்கான உள்நாடு, வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில்

காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 1கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் சிலையாக உள்ளது. இச்சிலை மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வருகை புரிந்து பிராத்தனை செய்யும் பக்தர்களுக்கு தேங்காய், வெற்றிலையுடன் கூடிய சிகப்பு நிற துணி பை வழங்கப்படுகிறது. அவர்கள் பிராத்தனை முடிந்த பிறகு அந்த பையினை அக்கோவிலுனுள் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். அதன் பிறகு கோவில் நிர்வாகிகள் மூன்று மாதம் கழித்து, அந்த வேண்டுதல் பையினை அப்புறபடுத்துவார்கள். அதற்குள் அவர்களது வேண்டுதல்கள் நிறைவேறுவதாக கூறப்படுகிறது. மேலும் நந்தி வடிவமான பாறை இயற்கையாக அமைந்துள்ளது. இதனை 11 முறை வலம் வந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவு செய்கின்றனர்.

பேட்டைராய சுவாமி கோவில்

பேட்டைராய சுவாமி கோவில் (பெருமாள் கோவில்) தேன்கனிக்கோட்டையில் அமைந்துள்ளது. இவ்வூர் ஒசூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து 65 கி.மீ. தெலைவில் உள்ளது. 14ம் நூற்றாண்டை சேர்ந்த கோவிலாகும். முக்கிய நிகழ்வாக பேட்டாராய சுவாமி கோவில் தேர்திருவிழா மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இங்கு அருகில் உள்ள மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இக்கோவில் திருத்தலம் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.