தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம்
தேதி : 28/09/2020 - | துறை: தோட்டக்கலை
- வெங்காய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு எக்டருக்கு ரூ.20000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
- பந்தல்: நிரந்தர பந்தல் கட்டமைப்பை அமைக்க ஒரு எக்டருக்கு ரூ.200000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
- இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல்: கீரை வகைகளுக்கு ஒரு எக்டருக்கு ரூ.2500-ம், வெண்டைக்காய், கத்திரிக்காய் மற்றும் தக்காளிக்கு ஒரு எக்டருக்கு ரூ.3750-ம், முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர்-க்கு ஒரு எக்டருக்கு ரூ.5000-ம் மானியமாக வழங்கப்படுகிறது.
திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்
- இத்திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் தகுதியானவா்கள். ஆனால் SF/MF/SC/ST/பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- விவசாயிகளுக்கு சொந்தமான நிலம் / குத்தகைக்கு விடப்பட்ட நிலம் (10 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை) இருக்க வேண்டும்.
- விவசாயிகள் வங்கி கணக்கு எண், ஆதார் அட்டை / குடும்ப அட்டை ஆகியவற்றை சமா்ப்பிக்கப்பட வேண்டும்.
- நடவுப் பொருள்களை எடுத்து செல்வதற்கான போக்குவரத்து செலவினங்களை விவசாயிகளே மேற்கொள்ள வேண்டும்.
- NPOP சான்றிதழ் பெற விண்ணப்பித்த அனைத்து விவசாயிகள் குழுக்களும் மற்றும் தனிப்பட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் தகுதியானவர்கள்.
- இத்திட்டத்தில் உள்ள விவசாயிகள் அவா்களின் வயல்களை Bhuvan App-இல் புகைப்படத்துடன் பதிவு செய்ய வேண்டும்.
- நிதி ஒதுக்கீடு பொது பிரிவினருக்கு 80 சதவீதமும், SC பிரிவினருக்கு 19 சதவீதமும், ST பிரிவினருக்கு 1 சதவீதமும் மற்றும் பெண்களுக்கு மொத்தம் 30 சதவீதமும் ஒதுக்கப்படுகிறது.
திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்
- உழவன் பதிவு மற்றும் HORTNET இன் மூலம் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளை தோ்வு செய்ய வேண்டும்.
- வட்டாரங்களில் பயனாளியின் விண்ணப்பம் பெறப்பட்ட தேதியுடன் முன்னுரிமை பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.
பயனாளி:
அனைத்து விவசாயிகளும்
பயன்கள்:
மானியம்
விண்ணப்பிப்பது எப்படி?
உழவன் பதிவு மற்றும் HORTNET இன் மூலம் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளை தோ்வு செய்ய வேண்டும்.