தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் (வலை மற்றும் பரிசல்) மீன்பிடி உபகரணங்கள் வழங்குதல்
| துறை: மீன்வள துறை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உள்நாட்டு மீனவர் / மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் பொருட்டும், அவர்களின் வருமானத்தினை அதிகப்படுத்தும் எண்ணத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 12 மீனவர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த சுமார் 5000 மீனவர்களுக்கு வலை மற்றும் பரிசல்கள் 50 சதவீதம் மான்யத்தில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதிகள்
உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள்
- இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தினை சார்ந்த பயனாளிகள், அந்தந்த வட்டத்தில் உள்ள மீன்துறை ஆய்வாளர்கள் / சார் ஆய்வாளர்களை நேரில் சென்று விண்ணப்ப படிவம், குடும்ப அட்டை(நகல்), ஆதார் அட்டை(நகல்), வங்கி கணக்கு புத்தகம்(நகல்) மற்றும் மீனவர் நலவாரிய அட்டை(நகல்) ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
- பயனாளிகள் விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்கும் முன்னர் சம்பந்தப்பட்ட மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவரின் வழியாக சமர்ப்பிக்க வேண்டும்
- பயனாளிகள் கடந்த 5 வருடத்திற்குள் இத்திட்டம் மூலம் பயன்பெற்றிருக்க கூடாது
திட்டத்தின் தாக்கம்
இத்திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மீன் உற்பத்தி திறனினை அதிகப்படுத்துகிறது.
பயனாளி:
உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்
பயன்கள்:
50 % மானியம்