காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில்
வழிகாட்டுதல்காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 1 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் சிலையாக உள்ளது. இச்சிலை மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வருகை புரிந்து பிராத்தனை செய்யும் பக்தர்களுக்கு தேங்காய், வெற்றிலையுடன் கூடிய சிகப்பு நிற துணி பை வழங்கப்படுகிறது. அவர்கள் பிராத்தனை முடிந்த பிறகு அந்த பையினை அக்கோவிலுனுள் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். அதன் பிறகு கோவில் நிர்வாகிகள் மூன்று மாதம் கழித்து, அந்த வேண்டுதல் பையினை அப்புறபடுத்துவார்கள். அதற்குள் அவர்களது வேண்டுதல்கள் நிறைவேறுவதாக கூறப்படுகிறது. மேலும் நந்தி வடிவமான பாறை இயற்கையாக அமைந்துள்ளது. இதனை 11 முறை வலம் வந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவு செய்கின்றனர்.
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி:
வான் வழியாக
அருகிலுள்ள விமான நிலையம் பெங்களூரில் உள்ளது
தொடர்வண்டி வழியாக
அருகில் உள்ள இரயில் நிலையம் தர்மபுரி மற்றும் ஓசூர் ஆகும்
சாலை வழியாக
கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது. சென்னை நகரத்திலிருந்து 5 மணிநேர பயணத்திற்கு இந்த இடம் செல்லலாம்.