மூடு

அய்யூர் - சுற்று சூழல் பூங்கா

வழிகாட்டுதல்

அய்யூர் இயற்கை சூழல் பூங்கா தேன்கனிக்கோட்டையில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஒசூரில் இருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சூற்று சூழல் பூங்கா கடல் மட்டத்தில் இருந்து 1060மீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்த பூங்கா வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

  1. இப்பூங்காவில் மூங்கில் குடில்கள், பாரம்பரிய குடில்கள், கண்காட்சி கோபுரம், சிறுவர்கள் விளையாட்டு மைதானம், செயற்கை நீர் ஊற்றுகள் இப்பூங்காவில் அமையப்பெற்றுள்ளது
  2. சாத்தங்கள் காட்சி கோபுரம் தேன்கனிக்கோட்டையில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது
  3. பசுமை பள்ளத்தாக்கு முனையில் இருந்து சுனை பாறை மற்றும் கோடிக்கரை ஆகிய இடங்களை காண முடியும்
  4. பசுமை மாறா குளிர்ச்சியான வன பகுதி (சோலா காடு) இவ்வனத்தினை அல்லல் தோப்பு என அழைக்கின்றனர் காரணம் அல்லல் மற்றும் நக்கி ஆகிய மரங்கள் கூட்டுத்தொகுப்பாக இவ்வனப்பகுதி பரந்து விரிந்து காணப்படுகிறது. இவை ஒன்றொடு ஒன்று பிண்ணி பினைந்து மேற்கூறை போன்று அமைந்துள்ளதால் சூரிய ஒளி புகாமல் தடுக்கப்படுகிறது. ஆகவே ஆண்டு முழுவதும் இக்காடு மிகவும் குளிர்ச்சியாக உள்ளது.

புகைப்பட தொகுப்பு

  • அய்யூர் மூங்கில் வனப்பகுதி
  • ஐயூர் வனம்
  • சாமி ஏரி

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ள விமான நிலையம் பெங்களூர்

தொடர்வண்டி வழியாக

அருகில் உள்ள ரயில் நிலையம் ஓசூர் ஆகும்

சாலை வழியாக

கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ளது. சென்னை நகரத்திலிருந்து 5 மணிநேர பயணத்திற்கு இந்த இடம் செல்லலாம்.