அனுமன் தீர்த்தம்
வழிகாட்டுதல்அனுமன் தீர்த்தம் என்னும் புண்ணிய தலம் ஊத்தங்கரையில் இருந்து 10 கி.மீ தொலைவிலும், கிருஷ்ணகிரியில் இருந்து 70 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோவில் தெண்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. வருகை புரியும் பக்தர்கள் அனுமன் தீர்த்த்தில் நீராடி விட்டு தீர்த்தமலைக்கு வழிபட செல்வது வழக்கம். இதிகாச காலத்தில் இராமன் தீர்த்தமலையில் வழிபட கங்கை தீர்த்தம் கொண்டு வர அனுமனுக்கு பணிக்கப்பட்டது. ஆனால் குறித்த நேரத்திற்க்குள் அனுமன் கங்கை தீர்த்தத்தை கொண்டு வர இயலாத காரணத்தினால் இராமன் அஸ்த பிரயாகம் செய்து வழிபாட்டை நிறைவு செய்தார். காலதாமதமாக வந்த அனுமன் கோபம் கொண்டு தன் கையில் இருந்த கங்கா தீர்த்தத்தை கொட்டினார். அதுவே இன்றைய அனுமன் தீர்த்தமாக மாறியுள்ளது. என்று புராண கால கதைகள் கூறுகிறது. அந்த அனுமன் தீர்த்தத்தில் இன்றளவும். புஜை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவிழா ஜீலை – ஆகஸ்ட் (மாதங்களிலும்) அனுமன் பிறந்தநாள் விழா டிசம்பர் மாதங்களிலும் நடைபெறுவது வழக்கம் அப்பொழுது ஆயிரக்கணக்கான உள்நாடு, வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
அடைவது எப்படி
வான் வழியாக
அருகிலுள்ள விமான நிலையம் பெங்களூரில் உள்ளது
தொடர்வண்டி வழியாக
அருகில் உள்ள ரயில் நிலையம் தர்மபுரி ஆகும்
சாலை வழியாக
கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ளது. சென்னை நகரத்திலிருந்து 6 மணிநேர பயணத்திற்கு இந்த இடம் செல்லலாம்.