மூடு

தளி ஏரி மற்றும் பூங்கா

வழிகாட்டுதல்

தளி ஏரி மற்றும் பூங்கா ஒசூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து 75 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கிராமம் முழுவதும் மலை கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. கடல் மட்டத்திற்கு மேல் 1000 அடி உயரத்தில் அமையபெற்ற கிராமம் ஆகும். இவ்விடத்தின் தட்ப வெட்ப நிலை ஆண்டு முழுவதும் மிகவும் குளிர்ச்சியாக உள்ளதால் அக்காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த ஆங்கிலேயர்கள் இப்பகுதியினை “லிட்டில் இங்கிலாந்து” என்று அழைத்தனர்.

இப்பகுதியில் உள்ள குளிர்ச்சியான தட்ப வெட்ப நிலை விவசாயத்திற்கு மிகவும் பயனள்ளதாக அமைந்துள்ளது. குறிப்பாக கொய் மலர்கள், காய்கறிகள், கனிகள் பெரும்மளவில் இங்கு விளைகிறது. மேலும் இவ்விடத்திற்கு ஒசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெங்களுரில் இருந்து பார்வையாளர்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.

புகைப்பட தொகுப்பு

  • தளி பறவைகள்
  • தளி- லிட்டில் இங்கிலாந்து

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ள விமான நிலையம் பெங்களூர்

தொடர்வண்டி வழியாக

அருகில் உள்ள ரயில் நிலையம் ஓசூர் ஆகும்

சாலை வழியாக

கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 77 கி.மீ தூரத்தில் உள்ளது. சென்னை நகரத்திலிருந்து 5 மணிநேர பயணத்திற்கு இந்த இடம் செல்லலாம்.