மூடு

சந்திரசூடேஸ்வரர் கோவில்

வழிகாட்டுதல்

சந்திரசூடேஸ்வரர் கோவில் (சிவன் கோவில்) ஓசூர் மாநகரில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ள திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் சிவபெருமான் அருள்மிகு மரகதாம்பாள் சமயோதிதராக (ஸ்ரீ சந்திரசூடேஸ்வராக காட்சியளிக்கிறார்) இக்கோவில் தேசிய நெடுஞ்சாலை -7க்கு அருகாமையில் அமைந்துள்ளது. பெங்களுரில் இருந்து 50 கி.மீ தொலைவிலும் கிருஷ்ணகிரியில் இருந்து 42 கி.மீ தெலைவிலும் அமைந்துள்ளது. அருகாமையில் கர்நாடகா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளது. இக்கோவில் மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி கோவில் போல் அமைந்துள்ளது. இக்கோவில் 11ஆம் நூற்றாண்டு சோழர்கள் கால கல்வெட்டு காணப்படுகிறது. முதலாம் இராஜராஜசோழன், குலோத்துங்கசோழன் ஆகியோரை பற்றிய அரிய தகவல்கள் உள்ளது.

சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இத்திருவிழா மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இவ்விழாவினை காண அருகில் உள்ள மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்கில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.

புகைப்பட தொகுப்பு

  • சந்திரசுடேஸ்வர
  • சந்திர சூடேஸ்வரர் கோயில்
  • சந்திர சூடேஸ்வரர் கோயில்

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ள விமான நிலையம் பெங்களூரில் உள்ளது

தொடர்வண்டி வழியாக

பெங்களூர் மற்றும் தர்மபுரியிலிருந்து ரயில் வசதி உள்ளது

சாலை வழியாக

கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ளது. சென்னை நகரத்திலிருந்து 6 மணிநேர பயணத்திற்கு இந்த இடம் செல்லலாம்.