மூடு

கிருஷ்ணகிரி அணைக்கட்டு பூங்கா

வழிகாட்டுதல்

கிருஷ்ணகிரி அணைக்கட்டு பூங்கா கிஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தென்பெண்ணையாற்றின் நீர் ஆதாரமாக உள்ளது. இவ்வணைக்கட்டு 1955 – 1957 வரை முன்னால் முதலமைச்சர் திரு.காமராஜர் அவர்களால், கட்டிமுடிக்கப்பட்டது. இவ்வணைக்கட்டின் மூலம் தேக்கப்பட்டுள்ள நீர் 1000 ஏக்கர் நிலபரப்பு பாசனத்திற்கு வழிவகைசெய்கிறது இவ்வணைக்கட்டில் 50 ஏக்கர் நிலபரப்பு கொண்ட ஒரு அழகிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் விளையாட்டு மைதானம் நீர் ஊற்றுகள், நடைமேடைகள் அமைக்கப்பெற்றுள்ளது.

புகைப்பட தொகுப்பு

  • கே.ஆர்.பி அணை
  • கே ஆர் பி அணை பூங்கா

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ள விமான நிலையம் பெங்களூரில் உள்ளது

தொடர்வண்டி வழியாக

அருகில் உள்ள இரயில் நிலையம் தர்மபுரி மற்றும் ஓசூர் ஆகும்

சாலை வழியாக

கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. சென்னை நகரத்திலிருந்து 5 மணிநேர பயணத்திற்கு இந்த இடம் செல்லலாம்.