மூடு

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

| துறை: தொழில் துறை

தமிழ்நாடு அரசு வேலையில்லாத இளைஞர்களுக்கு குறிப்பாக சமுதாயம் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பிரிவு மக்கள் உற்பத்தி/சேவை மற்றும் வியாபார நிறுவனங்கள் அமைத்து சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டத்தின் பயன் பெறுவதற்கான தகுதிகள்

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 35 வயது வரை பொது பிரிவினருக்கும், 45 வயது வரை சிறப்பு பயனாளிகளான மகளிர், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள்

இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ.3 இலட்சம் வரையிலும், வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் வரையிலும் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது திட்ட மதிப்பிட்டில் 25% அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் மானியம் அளிக்கப்படும். பொது பயனாளி தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் 5% செலுத்த வேண்டும. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய பயனாளிகள் http://www.msmeonline.tn.gov.in/uyegp/ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி தொலைபேசி எண்: 04343 235567 முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பயனாளி:

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 35 வயது வரை பொது பிரிவினருக்கும், 45 வயது வரை சிறப்பு பயனாளிகளான மகளிர், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

பயன்கள்: