மூடு

நீலப்புரட்சி திட்டம்-மீன்பண்ணைகள் புதுப்பித்தல் மற்றும் புணரமைத்தல் திட்டம்

| துறை: மீன்வள துறை
  • மீன்கள் எளிதில் செரிக்ககூடிய மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும் புரதம் நிறைந்த அற்புத உணவாகும்.
  • சூற்றுச்சூழல் மாசு மற்றும் அதிக மீன்பிடிப்பு காரணமாக இயற்கை நீர்நிலைகளில் மீன்களின் இருப்பு விகிதம் மிகவும் குறைந்து காணப்படுகிறது.
  • இந்நிலையினை எதிர்கொள்ள வேண்டி நீலப்புரட்சி 2020 என்ற திட்டம் மூலம்,ஒருங்கிணைந்த மீன்வளர்ப்பு முறை மற்றும் நீர்நிலைகளை ஆக்கபூர்வமாகவும், மீன்விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும் நிலையான மற்றும் பாதுகாப்பான மீன்வளர்ப்பு முறையினை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தின் பயனை பெறுவதற்கான தகுதிகள்

மாவட்ட மீன்வள்ர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள்

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள முகமை உறுப்பினர்கள் தங்களது வட்டத்தில் உள்ள மீன்துறை ஆய்வாளர்கள்/சார் ஆய்வாளர்அலுவலகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்ப படிவங்களுடன் குடும்ப அட்டை(நகல்), ஆதார் அட்டை(நகல்), வங்கி கணக்கு புத்தகம்(நகல்), நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் நகல் (பட்டா, சிட்டா மற்றும் நில வரைபடம்) ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

திட்டத்தின் தாக்கம்

  • கூட்டின மீன்வளர்ப்பு மூலம் அதிகப்படியான மீன் உற்பத்தி மற்றும் அதிக லாபம் பெறலாம்.
  • மேலும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை கூட்டின மீன்வளர்ப்பு மூலம் அதிகரிக்கலாம்.

பயனாளி:

மாவட்ட மீன்வள்ர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்

பயன்கள்:

மீன்பண்ணைகள் புதுப்பித்தல் மற்றும் புணரமைத்தல்