மூடு

புதுப்பிக்கப்பட்ட பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்

தேதி : 28/09/2020 - | துறை: தோட்டக்கலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உருளைக்கிழங்கு, வாழைப்பழம், கத்திரிக்காய், மஞ்சள், முட்டைக்கோஸ், தக்காளி, மா, சிவப்பு மிளகாய் ஆகிய பயிர்களுக்கு காப்பீட்டு திட்டமானது RPMFBY கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்தால் இயற்கை பேரழிவுகள் காரணமாக பயிர் சேதங்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட கிராமங்களுக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (RPMFBY) கவனம் செலுத்தப்பட்டது. மா பயிர்களுக்கு கிருஷ்ணகிரி, காவேரிபட்டினம், கெலமங்கலம், ஓசூர், பர்கூர், ஊத்தங்கரை, சூளகிரி, தளி, வேப்பனபள்ளி மற்றும் மத்தூர் வட்டாரங்களும், வாழை பயிர்களுக்கு காவேரிப்பட்டிணம் மற்றும் வேப்பனப்பள்ளி வட்டாரங்களும், உருளைகிழங்கு பயிர்களுக்கு கெலமங்கலம், ஒசூா் மற்றம் சூளகிரி வட்டாரங்களும், முட்டைகோஸ் பயிர்களுக்கு கெலமங்கலம் மற்றும் தளி வட்டாரங்களும், மஞ்சள் பயிர்களுக்கு காவேரிப்பட்டிணம் மற்றும் மத்தூா் வட்டாரங்களும், கத்திரி பயிர்களுக்கு கெலமங்கலம் வட்டாரமும் மற்றும் தக்காளி பயிர்களுக்கு கிருஷ்ணகிரி, கெலமங்கலம், ஓசூர், ஊத்தங்கரை, சூளகிரி, மற்றும் தளி வட்டாரங்களும் பயிர் காப்பீட்டு தொகை கோரலாம்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

  • வாழை, மஞ்சள், தக்காளி, கத்திரி, முட்டைக்கோஸ் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்களை பயிரிடும் விவசாயிகள் இந்திய வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் பயிர் காப்பீடு பெறலாம்.

பயனாளி:

அனைத்து விவசாயிகளும்

பயன்கள்:

காப்பீடு

விண்ணப்பிப்பது எப்படி?

பின்வரும் ஆவணங்களுடன் உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்

வங்கி கணக்கு எண், ஆதார் அட்டை நகல் மற்றும் பயிர் சாகுபடி சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து காப்பீடு தொகையை செலுத்த வேண்டும்.
பொது சேவை மையங்கள், வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பதிவு செய்ய வேண்டும்.