மூடு

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு

| துறை: சுகாதாரம்

பிறப்பு இறப்பு பதிவானது நிகழ்வு நடைபெற்ற இடங்களில் மட்டும் பதிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு பிறப்பு மற்றும் இறப்பு விதி 2000 –ன் படி 1.1.2000 முதல் பிரிவு 30-ன் படி பிறப்பு மற்றும் இறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

பிறப்பு மற்றும் இறப்புகளை 21 நாட்களுக்கு மேல் ஓராண்டிற்குள் பதிவு செய்வதற்கு கால தாமதப் பதிவு கட்டணம் செலுத்தவேண்டும்.

ஓராண்டிற்கு மேல் பிறப்பு மற்றம் இறப்புகளை பதிவு செய்ய அரசாணை 293 ன் படி வருவாய் கோட்டசியர் அவர்களிடம் ஆணை பெற்று பதிவு செய்ய வேண்டும்.

குழந்தையின் பெயரினை பதிவு செய்யப்பட்டிருப்பின் பின் குழந்தையின் பெயரை மாற்றி தர இயலாது. தேவை ஏற்பின் அரசு இதழில் மாற்றி வெளியிடாலம்.

மருத்துவமனையில் இறப்பு நிகழ்ந்திருந்தால் மருத்துவ சான்றிதழ் படிவம் 4 மற்றும் மருத்துவமனைங்கள் அல்லாத இடங்களில் இறப்பு நிகழ்ந்திருந்தால் படிவம் 4அ போன்றவற்றை இறப்பினை பதிவு செய்யும் போது பதிவாளரிடம் தகவல் அளிப்பவர் சமர்ப்பிக்க வேண்டும்.

பிறப்பு மற்றும் இறப்புகள் நடைபெற்ற இடங்களில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். நிலையான முகவரி அல்லது புதைக்கும் இடங்களை சார்ந்து பதிவு செய்ய முடியாது.

குழந்தைக்கான பிறப்பு சான்றிதழ் பெற பேறு கால குழந்தை எண் (RCH ID) கிராம நகர சுகாதார செவிலியரிடம் பெற்றிருக்க வேண்டும்.

பயனாளி:

அனைத்து குடிமகனும்

பயன்கள்:

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல்