சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை திட்டம் பற்றிய விளக்கம்
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி, ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் கிறித்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு மைய அரசின் கீழ்கண்ட கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- பள்ளிப்படிப்பு – 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை
- பள்ளி மேற்படிப்பு – 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை
- தகுதி மற்றும் வருவாய் அடிப்படை – தொழிற்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி
திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்
ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையினத்தை சோந்த மாணவ மாணவியாகள் பயன் பெறத் தகுதி பெற்றவாகள்
திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்
மாணவர்கள் மேற்படி கல்வி உதவித்தொகைகளை பெற உரிய பள்ளி, கல்லூரி முதல்வர்கள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். (www.scholarships.gov.in). மேலும் விவரங்களுக்கு மா.பி.ந. அலுவலகத்தை அணுகி பயனடையலாம்.
பயனாளி:
ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையினத்தை சோந்த மாணவ மாணவியாகள்
பயன்கள்:
கல்வி உதவித்தொகை