விலையில்லா தையல் இயந்திரம்
| துறை: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த ஏழ்மை நிலையிலுள்ள மக்கள் சுயமாக தொழில் செய்து வருமானத்தை ஈட்டி பொருளாதார நிலையை மேம்படுத்திட விலையில்லா தையல் இயந்திரங்கள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்
- பயனாளிகள் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களாகவும், 20 முதல் 45 வயதிற்குட்பட்டவர்களாகவும், தையல் கலை அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்
- பயனாளிகள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000 -ம் ஆகும்.சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை மூலம் தையல் இயந்திரங்கள் பெற்ற பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்
மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயனடையலாம்.
பயனாளி:
Beneficiaries should belong to Backward Classes, Most Backward Classes and Denotified Communities and should have knowledge in tailoring and the age limit is from 20 to 45 years.
பயன்கள்:
விலையில்லா தையல் இயந்திரம்