புரட்சித்தலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவு திட்டம்
                                 தேதி : 01/07/1982 -                                 | துறை: சமூகநலம்                              
                            
              திட்டத்தின் நோக்கம்
- பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு பசியினை போக்குதல்.
 - பள்ளிக்கூடத்தில் மாணவா்கள் சோ்க்கை அதிகரித்தல்.
 - மாணவ பருவகாலத்திலிருந்தே அனைத்து வகுப்பினரும் சமுதாய பாகுபாடின்றி வாழ வழிவகுத்தல்.
 - குழந்தைகளிடம் ஊட்டசத்து பற்றாக்குறை பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்துதல்.
 - பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளித்து, வேலைவாய்ப்பு அளிப்பதால், பெண்களின் சமூக மேம்பாடு அதிகரித்தல்.
 
திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு இத்திட்டத்தினை பெற தகுதியுடைவராகிறார்கள்.
திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்
1 முதல் 10-ம் வகுப்பு வரை அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் மதிய உணவு உண்ண விருப்பம் தெரிவிப்பதன் பேரில் மதிய உணவு வழங்கப்படும்.
பயனாளி:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு இத்திட்டத்தினை பெற தகுதியுடைவராகிறார்கள்
பயன்கள்:
மதிய உணவு வழங்குதல்