மூடு

நரிக்குறவர் நல வாரியம்

| துறை: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்

நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு விபத்து நிவாரணம், கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள் மூலம் வழங்கப்படுகிறது. இது தவிர தொழில் தொடங்குவதற்கு மானிய உதவியும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் தனியாகத் தொழில் தொடங்க பதிவு செய்த உறுப்பினருக்கோ அல்லது அவரைச் சார்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அங்கத்தினருக்கோ அதிக பட்சமாக ரூ.7500 (ரூபாய் ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) முழு மானியமாக நரிக்குறவர் நல வாரியம் மூலம் வழங்கப்படுகிறது.

மேலும் நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்கள் குழுக்களாக சேர்ந்து தொழில் தொடங்குவதற்கு தனிநபர் மானியமாக ரூ.10,000-ம் (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) அல்லது குழுவிற்கு ரூ. 1,25,000- (ரூபாய் ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் மட்டும்) அல்லது திட்ட மதிப்பீட்டில் 50% இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக பின் நிகழ்வாக நடைமுறையிலுள்ள விதிகளுக்குட்பட்டு வழங்கப்படுகிறது.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இத்திட்டத்தின் பலனை பெறத் தகுதி பெற்றவர்கள்

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயனடையலாம்.

பயனாளி:

18 வயது அடைந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள்

பயன்கள்:

விபத்து நிவாரணம், கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம்