மூடு

மகளிர் திட்டம்

சேவை வகை வாரியாக வடிகட்டி

வடிகட்டி

அம்மா இருசக்கர வாகனத்திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள உழைக்கும் மகளிர் தங்களது பணிக்கு உதவிடும் வகையில் பெண்கள் பயன்படுத்தும் வகையில் இரு சக்கர வாகனத்தை 50% மானியத்தில் வாங்கிட உதவும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள தமிழ்நாட்டில் வசிக்கும் மகளிர் இத்திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவர் ஆவர். இருசக்கர வாகனம் ஒட்டுவதற்கான உரிமம் / பழகுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- மிகாதிருக்க வேண்டும். 8-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மலை பகுதியில் வசிப்போர், பெண்களை தலைவராக கொண்ட குடும்பம்,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுதிறனாளி…

வெளியிடப்பட்ட தேதி: 02/07/2018
விவரங்களை பார்க்க

திறன் பயிற்சி மூலம் வேலை வாய்ப்பு அளித்தல்

நகர்புற ஏழைகளுக்கு திறன் பயிற்சி அளித்தல் பெற்ற திறன் பயிற்சிக்கு சான்றிதழ் வழங்குதல் உரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளித்தல் தொடர்ந்து வேலை வாய்ப்பை உறுதி செய்தல் இதன் மூலம் நிலையான வருவாய் உறுதி செய்தல் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் நகர்புற ஏழை குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் குறைந்த்து 30% மகளிராக இருக்க வேண்டும் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் தகுதியுடைய நபர்கள் நகர்புற சமூக அமைப்பாளர்களை அணுகி ஆண்டு தோறும் அளிக்கப்படும் இப்பயிற்சிகளை பெற்று வேலை வாய்ப்பு பெறலாம்

வெளியிடப்பட்ட தேதி: 02/07/2018
விவரங்களை பார்க்க

நகர்புற ஏழைகளுக்கு சுய வேலை வாய்ப்புக்கு கடன் அளித்தல

நகர்புற மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் ஏழை தனி நபர்களுக்கு வங்கி கடன் பெற உதவிடுதல் தனி நபர் கடன் ரூ.2,00,000/- வரை பெறலாம் குழுகடன் ரூ.10,00,000/- வரை வழங்கப்படுகிறது. வட்டியில் ஒரு பகுதி மானியமாக திரும்ப வழங்கப்படுகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் நகர்புற ஏழ்மை நிலையில் உள்ள தனி நபர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இக்கடன் மற்றும் வட்டி மானியம் பெறலாம் இவர்கள் வங்கி கடனை வட்டியுடன் தவணை தவறாமல் திரும்ப செலுத்தியிருக்க வேண்டும். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் தகுதியுடைய நபர்கள் மற்றும் குழுக்கள் தாங்கள் பெற்ற கடன் மற்றும் திரும்ப செலுத்திய…

வெளியிடப்பட்ட தேதி: 02/07/2018
விவரங்களை பார்க்க

தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கதில் புதிய மகளிர் சுய உதவி குழுக்களை அமைத்து நிலைபடுத்துதல்

நகர்புற ஏழை மகளிரை கொண்டு சுய உதவி குழுக்களை அமைத்தல். அவ்வாறு அமைக்கப்படும் மகளிர் சுய உதவி குழு. உறுப்பினர்களுக்கு பயிற்சிகளை அளித்தல். அக்குழுக்களுக்கு சுழல் நிதி ரூ 10,000/- வழங்குதல். அக்குழுக்களுக்கு தொழில் தொடர்ந்து நடத்த வங்கி கடன் பெற உதவிடுதல். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் குறைந்தபட்டம் 12 முதல் 20 நபர்களை கொண்டு குழுக்களை அமைக்க வேண்டும். 70% மகளிர் நகர்புற ஏழைகளாக இருக்க வேண்டும் மாற்று திறனாளிகளை கொண்டு அமைக்கப்படும் குழுக்களில் 5 நபர்கள் இருந்தால் போதுமானது திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் தகுதியுடைய நபர்கள் நகர்புற சமூக அமைப்பாளர்களை தொடர்பு கொண்டால்…

வெளியிடப்பட்ட தேதி: 02/07/2018
விவரங்களை பார்க்க

மகளிர் சுய உதவிக் குழுக்காளுக்கான வட்டி மானியம்

இந்திய அரசு, சுய உதவி குழுக்கள் பெறும் கடனுக்கான வட்டி மானியம் சம்மந்தப்பட்ட குழுக்களுக்கு நேரடியாக தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வழங்குகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் சுய உதவி குழுக்கள் தாங்கள் பெற்ற வங்கி கடனை முறையான திருப்பிச் செலுத்தியிருக்க வேண்டும். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் சுய உதவி குழுக்கள் கடன் திரும்ப செலுத்துதல் குறித்த விவரங்களை இந்திய அரசின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணைய தளதில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சுய உதவி குழுக்கள் கடன் திரும்ப செலுத்துதல் குறித்த விவரங்களை பஞ்சாயத் அலவிளான கூட்டமைப்பு மூலம் தமிழ்நாடு மாநில ஊரக…

வெளியிடப்பட்ட தேதி: 02/07/2018
விவரங்களை பார்க்க

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி கடன்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சமூக, பொருளாதார மேம்பாடு அடையவும் மேலும் அரசியல் அதிகாரம் பெற உதவிடும் வகையிலும் இந்திய அரசின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்துகிறது. இத்திட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நிதி உதவி வங்கிகளின் மூலம் கடனாக பெற வழிவகை செய்கிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் குறைந்தது 6 மாத நிறைவு செய்த சுய உதவி குழுக்கள். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் கடனுக்கான தர மதிப்பீடு, தொழில்…

வெளியிடப்பட்ட தேதி: 02/07/2018
விவரங்களை பார்க்க

வேலை வாய்ப்பு முகாம் நடத்துதல்

வேலைவாய்ப்பு முகாமின் முக்கிய நோக்கம் வேலை அளிக்க்கூடிய நிறுவனங்களையும் மற்றும் வேலை தேடும் இளைஞர்களையும் ஒரு இடத்தில் சந்திக்க வைத்து வேலைவாய்ப்பினை உருவாக்குதே. மேலும், இந்த முகாமின் அடிப்படை நோக்கம் தகுதி உள்ள இளைஞர்களை பயிற்சி அளிக்காமல் நேரடியாக பணியில் அமர்த்துவதே. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் உள்ளுர் இளைஞர்கள் (கிராமம் (ம) நகர்புறம்) வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை, வயது வரம்பு சில நிறுவனங்களில் தேவைக்கேற்ப 50 வயது வரை கல்வி தகுதி 5 ஆம் வகுப்பு முதல் திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் வட்டார அளவில் மற்றும் மாவட்ட அளவில் நடைப்பெறும்…

வெளியிடப்பட்ட தேதி: 02/07/2018
விவரங்களை பார்க்க

தீன் தயாள் உபாத்யாயா ஊரக திறன் மேம்பாட்டு திட்டம்

கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து பொருளாதார மேம்பாடு அடைய செய்து சுதந்திரமாகவும், உலகளவிலும் அவர்கள் பணிபுரிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதே இத்திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும். இத்திட்டம் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஓர் அங்கமாகும். கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கிராமங்களிலுள்ள ஏழை குடும்பங்களை சார்ந்த படித்த வேலையற்ற இளைஞர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றுக் கொள்ளலாம். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் கிராமப்புற ஏழை குடும்பங்களை சார்ந்த இளைஞர்கள் வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை பெண்களுக்கு 40 வயது வரையிலும் மற்ற…

வெளியிடப்பட்ட தேதி: 02/07/2018
விவரங்களை பார்க்க

சமுதாய முதலீட்டு நிதி

அமைக்கப்பட்டுள்ள தொழில் செய்யும் தகுதியான குழுக்களுக்கு VPRC மற்றும் PLF மூலம் ரூ.50,000/- வீதம் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படுகிறது. திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் சமுதாய முதலீட்டு நிதி பெற 6 மாதம் நிறைவடைந்த சுய உதவிக் குழுவிற்கு தொழில் மேற்கொள்ள சுய உதவிக்குழு நுண்நிதி திட்டம் (Micro Credit Plan) தயார் செய்து அதன் அடிப்படையில் சமுதாய முதலீட்டு நிதி ஒவ்வொரு குழுவிற்கும் ரூ.50,000/- வீதம் பெறலாம். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் சமுதாய முதலீட்டு நிதியாக தலா ரூ.2 இலட்சம் வீதம் 155 கிராம ஊராட்சிகளில் உள்ள 620 சுய உதவிக்குழுக்களுக்கு மொத்தம் 3,10,00,000/-…

வெளியிடப்பட்ட தேதி: 02/07/2018
விவரங்களை பார்க்க

நலிவுற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு நிதி

நலிவுற்ற மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறு தொழில் துவங்க தனி நபர் சுழல் நிதி (VPRC) வழங்குதல். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் கிராம சபாவில் அங்கீகாரம் பெற்றுள்ள நலிவுற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி நபர் கடன் தொழில் துவங்கிட வழங்குதல். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள் கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் தீர்மானத்தின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட தேதி: 02/07/2018
விவரங்களை பார்க்க