மாவட்ட நகர் ஊரமைப்பு
மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், கிருஷ்ணகிரி மாவட்டம்
அரசாணை எண்.4 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நாள். 06.01.2020-ன் படி கிருஷ்ணகிரி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் 17.07.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
நிர்வாகம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 வருவாய் வட்டங்கள் அமைந்துள்ளது.
உள்ளாட்சிகள்
மாநகராட்சி – 1
நகராட்சி – 1
பேரூராட்சி – 6
ஊராட்சி ஒன்றியம் – 10
ஒசூர் புதுநகர் வளர்ச்சிக்குழும திட்டப்பகுதி
ஒசூர் புதுநகர் வளர்ச்சிக்குழுமம், நகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 10(1)(ஏ)-ன் கீழ் அரசாணை எண்.257, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் நாள்.22.02.1978-ன்படி, புதுநகர் வளர்ச்சிக்குழுமமாக அறிவிப்பு செய்யப்பட்டது மற்றும் நகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 10(4)-ன் கீழ் அரசாணை எண்.782, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் நாள்.19.05.1979-ன்படி உறுதிப்படுத்தப்பட்டது.
நகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 10(4)-ன் கீழ் அரசாணை எண்.01, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நாள்.02.01.2013-ன்படி, ஒசூர் புதுநகர் வளச்சிக்குழுமத்தில் கூடுதல் பகுதி சேர்க்கப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது மற்றும் நகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 10(4)-ன் கீழ் அரசாணை எண்.96, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் [ந.வ4(2)] துறை, நாள்.29.05.2017-ன்படி உறுதிப்படுத்தப்பட்டது.
ஒசூர் புதுநகர் வளர்ச்சிக்குழும திட்டப் பகுதிக்கான ஒசூர் வளர்ச்சித் திட்டம் – 2046
அரசாணை எண்.96, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் [ந.வ4(2)] துறை, நாள்.29.05.2017-ன்படி உறுதிப்படுத்தப்பட்ட ஒசூர் மாநகராட்சி மற்றும் கெலமங்கலம் பேரூராட்சியுடன் 130 கிராமங்களுடன் கூடிய ஒசூர் புதுநகர் வளர்ச்சிக் குழும திட்டப் பகுதிக்கான முழுமைத்திட்டம் தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 (தமிழ்நாடு சட்டம், 1971 பிரிவு 35) பிரிவு 24(2)-ன் கீழ் அரசாணை எண்.205, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் [ந.வ4(2)] துறை, நாள்.18.11.2022-ல் அரசால் இணக்கமளிக்கப்பட்டது.
அரசால் இணக்கமளிக்கப்பட்ட ஒசூர் புதுநகர் வளர்ச்சிக் குழும திட்டப் பகுதிக்கான ஒசூர் வளர்ச்சித் திட்டம் 2046 ஆனது தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 28-ன் கீழ் அரசாணை எண்.08, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் [ந.வ4(2)] துறை, நாள்.20.01.2025-ல் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம் 1971 (தமிழ்நாடு சட்டம் 1972, பிரிவு 35) பிரிவு 35(1)-ன் கீழ் தமிழ்நாடு அரசிதழ் பிரசுரம் எண்.32, பகுதி-II, பிரிவு-2, நாள்.22.01.2025-ல் பிரசுரம் செய்யப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒசூர் வளர்ச்சித் திட்டப் பகுதியில் அடங்கும் கிராமங்கள்
ஒசூர் நகரம், ஆவலப்பள்ளி, அனுமேப்பள்ளி அக்ரஹாரம், பேகேப்பள்ளி, சென்னாத்தூர், கொத்தகொண்டப்பள்ளி, மத்திகிரி, மூக்கொண்டப்பள்ளி, மொத்தம் அக்ரஹாரம், நல்லூர், ஒன்னல்வாடி, சாந்தபுரம் அக்ரஹாரம், தொரப்பள்ளி அக்ரஹாரம், விஸ்வநாதபுரம், ஜுஜுவாடி, கெலமங்கலம், அச்செட்டிப்பள்ளி, அட்டகுறுக்கி, அடவனப்பள்ளி, அலசப்பள்ளி, அலேநத்தம், ஆலூர் 13, ஆலூர் 117 (1 & 2), அமுதுகொண்டப்பள்ளி, ஆனேகொள்ளு, அத்திமுகம், அட்டூர் 116, அட்டூர் 74, படதேப்பள்ளி, பாகலூர், பாலிகானப்பள்ளி, பட்டவரப்பள்ளி, பெலகொண்டப்பள்ளி, பெளத்தூர், பேரிகை, பைரமங்கலம், பொப்ளாபுரம், போடிச்சிப்பள்ளி, புக்கசாகரம், சின்னகுள்ளு, தசப்பள்ளி, தேவகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, தின்னப்பள்ளி, தோரிப்பள்ளி, ஈச்சங்கூர், எலுவப்பள்ளி 82, கோபனப்பள்ளி, கோவிந்த அக்ரஹாரம், ஹொசாபுரம், இடிப்பள்ளி, ஜகீர் கருப்பள்ளி, ஜுமங்கலம், ஜோகிகலசமானப்பள்ளி, கதிர்கான தின்னா, கக்கனூர், காளஸ்திபுரம், கள்ளி அக்ரஹாரம், கள்ளிபுரம், கலுகொண்டப்பள்ளி, காமன்தொட்டி, கனிமங்கலம், கரிபாசனப்புரம், கருப்பள்ளி, காட்டினாயக்கன்தொட்டி, கெலவரப்பள்ளி, கெம்பசந்திரம், கெம்பட்டி, கொடியாளம் 4, கொடியாளம் 13, கொளதாசபுரம், கொமரனப்பள்ளி, கோட்டப்பள்ளி, குந்துமாரனப்பள்ளி, கூஸ்தனப்பள்ளி, லிங்காபுரம், மல்லசந்திரம், மாரசந்திரம், மதகொண்டப்பள்ளி, மிடிதப்பள்ளி, மோரனப்பள்ளி, முகலப்பள்ளி, முகலூர், மூர்த்திகான தின்னா, முத்தாளி, முதுகானப்பள்ளி 18, முதுகானப்பள்ளி 94, நாகப்பன் அக்ரஹாரம், நாகொண்டப்பள்ளி, நல்லிகபெட்டம் அக்ரஹாரம், நந்திமங்கலம், நஞ்சாபுரம், நரிகானப்புரம், ஒட்டப்பள்ளி, ஒட்டப்பள்ளி தின்னா, பலவனப்பள்ளி, பஞ்சாக்சிபுரம், பாத்தகோட்டா, பாத்தமுத்தளை, பெத்தகுள்ளு, பெத்தமதகொண்டப்பள்ளி, பிச்சுகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, புனுகன்தொட்டி, புரம், ரங்கோபண்டித அக்ரஹாரம், சானமாவு, சானமாவு R.F(1&2), சரகப்பள்ளி, சாத்தனூர், சேவகானப்பள்ளி, சித்தனப்பள்ளி, சிங்கசாதனப்பள்ளி, சொக்கநாதபுரம், சொக்கரசனப்பள்ளி, சுப்பகிரி, சுடகொண்டப்பள்ளி, தட்டகானப்பள்ளி, தண்டரை, தியாரனதுர்க்கம், தொகரை அக்ரஹாரம், தும்மனப்பள்ளி, துப்புகானப்பள்ளி, திம்மசந்திரம், வனமங்கலம், வட்டிரிப்பள்ளி.
ஒசூர் வளர்ச்சித் திட்டம் 2046 திட்ட அறிக்கை மற்றும் அட்டவனை
ஒசூர் வளர்ச்சித் திட்டம் 2046 – வரைபடம்
கிருஷ்ணகிரி உள்ளுர் திட்டப்பகுதி
நகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 10(4)-ன் கீழ் அரசாணை எண்.1249, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம், நாள்.16.05.1974-ன்படி, கிருஷ்ணகிரி உள்ளுர் திட்டப்பகுதியாக அறிவிப்பு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி முழுமைத்திட்டம்
நகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 28-ன் கீழ் அரசாணை எண்.335 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நாள்.13.12.2006-ன்படி, கிருஷ்ணகிரி மாற்றியமைக்கப்பட்ட முழுமைத்திட்டம் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி உள்ளுர் திட்டப்பகுதியில் கிருஷ்ணகிரி நகராட்சி (கிருஷ்ணகிரி கிராமம், போகனப்பள்ளி கிராமம் பகுதி மட்டும், கட்டிகானப்பள்ளி கிராமம்).
கிருஷ்ணகிரி முழுமைத்திட்டம் நிலஉபயோக அட்டவணை
முழுமைத்திட்ட வரைபடம்
சட்டம் மற்றும் விதிகள்
• தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் – 2019
பெயர் / பதவி | தொடர்பு எண் | மின்னஞ்சல் | முகவரி |
---|---|---|---|
துணை இயக்குநர் (பொ) | 04344 – 222563 | krishnagiri[dot]district2020[at]gmail[dot]com | மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், #39/9, முதல் தளம், மின் நகர்,2வது குறுக்கு தெரு, TNEB அலுவலகம் அருகில்,இராயகோட்டை சாலை, ஒசூர் – 635 109. கிருஷ்ணகிரி மாவட்டம் |