மூடு

மின்னாளுமை

மின் மாவட்ட திட்டம்

மின்னாளுமை மாவட்ட திட்டம் என்பது தேசிய மின்னாளுமை திட்டத்தின் கீழ் மாநில கொள்கை முனைப்பு திட்டங்களின் (State Mission Mode Project ) ஒரு பகுதியாக விளங்குகிறது. மிக அதிக அளவில் சேவை வழங்கப்படும் அரசு சேவைகளில், சேவைகளின் தரத்தை உயர்த்தி, இணையம் மூலமாக வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசு செயல்பாடுகள் மறுசீரமைப்பு தொழில்நுட்பங்களை இந்த திட்டத்தில் பயன்படுத்துகிறது. 06.01.2012 தேதியிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை அரசாணை எண்.2 படி எல்லா மாவட்டங்களிலும் மின்னாளுமை மாவட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள்

வ.எண் சேவை துறை மையங்களின் எண்ணிக்கை
1 அரசு கேபிள் தொலைக்காட்சி 9
2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 105
3. மகளிர் திட்டம் 147
4. கிராம தொழில் முனைவோர் 167
மொத்தம் 428 (PDF 376 KB)

மின்னாளுமை மாவட்ட சேவைகள்

மாவட்ட வருவாய்துறை சேவைகள்

இதில் வருவாய் துறையின் 9 சேவைகள் வழங்கப்படுகின்றன. அவையாவன

  1. சாதிச்சான்றிதழ்
  2. இருப்பிட சான்றிதழ் (5 அல்லது மேற்பட்ட வருடங்களுக்கு) / குடியிருப்பு சான்றிதழ் (3 அல்லது அதற்கு கீழுள்ள வருடங்களுக்கு)
  3. வருமானச் சான்றிதழ்
  4. முதல் பட்டதாரி சான்றிதழ்
  5. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ்
  6. தமிழ்நிலம் – உட்பிரிவுகளுடன் கூடியது (ஊரகம்)
  7. தமிழ்நிலம் – உட்பிரிவுகள் இல்லாதது (ஊரகம்)
  8. தமிழ்நிலம் – கூட்டு பட்டா மாறுதல் (ஊரகம்)
  9. தமிழ்நிலம் – நகர்ப்புறம் பட்டா மாறுதல்

சமூக நலத்துறைசேவைகள்

இதில் பின்வரும் 7 சேவைகள் வழங்கப்படுகிறது.

  1. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்
  2. அன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம்
  3. ஈவேரா மணியம்மை நினைவு விதவை மகள் திருமண உதவி திட்டம்
  4. தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம்
  5. டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்
  6. பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – I
  7. பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – II

பிற சேவைகள்

கீழ்க்காணும் 15 வகை வருவாய் சான்றிதழ்களையும் பொது சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  1. விவசாய வருமானச் சான்றிதழ்
  2. சிறு, குறு விவசாயி சான்றிதழ்
  3. கலப்புத் திருமணச் சான்றிதழ்
  4. விதவைச் சான்றிதழ்
  5. வேலையின்மைச் சான்றிதழ்
  6. குடும்ப குடிப்பெயர்வு சான்றிதழ்
  7. கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்தமைக்கானச் சான்றிதழ்
  8. ஆண் குழந்தை இன்மைச் சான்றிதழ்
  9. திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ்
  10. வாரிசு சான்றிதழ்
  11. இருப்பிடச் சான்றிதழ்
  12. செல்வ நிலைச் சான்றிதழ் (Solvency Certificate)
  13. அடகு வணிகர் உரிமம் (Pawn Brokers License)
  14. வட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம் (Money Lenders License)
  15. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் (OBC Certificate).

மின்னாளுமை மாவட்ட சேவைகள் – சேவை கட்டணம்

இ-சேவை திட்டத்தில் வழங்கப்படும் சேவைகள்- சேவை கட்டணம்
வ.எண் துறை இ-சேவை துறை கட்டணங்கள் சேவை கட்டணம்
1 வருவாய்த்துறை சான்றிதழ்கள் 0 60
2 வருவாய்த்துறை இணைய வழி பட்டா மாறுதல் 0 60
3 சமூக நலத்துறை சமூக நலத்துறை திட்டங்கள் 0 120
4 மின்சார வாரியம் மின் உபயோக கட்டணம்

Upto 1000

1001 – 3000

3001 – 5000

5001 – 10000

10001 and above

15

25

40

50

60

5 பொது வினியோகத்திட்டம் புதிய குடும்ப அட்டை 0 60
6 பொது வினியோகத்திட்டம் குடும்ப அட்டை திருத்தம் 0 60
7 பொது வினியோகத்திட்டம் குடும்ப அட்டை அச்சிட 0 30
8 தா.நா.இ.சே தமிழ்நாடு பொறியியல் சேர்கை

பொது. Rs.500

மற்றவை Rs.250

60

60

9 தீயனைப்பு துறை தடையின்மை சான்றிதழ் – பல மாடி குடியிருப்பு திட்ட அனுமதி 0 120
10 தீயனைப்பு துறை தடையின்மை சான்றிதழ் – குடியிருப்பு திட்ட அனுமதி 0 120
11 தீயனைப்பு துறை பல மாடி குடியிருப்பு – தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல் 0 120
12 தீயனைப்பு துறை தீ அனுமதி – பதிவு மற்றும் புதுப்பித்தல் 0 120