கருவூலம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை 06-02-2004 முதல் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்திலிருந்து பிரந்து செயல்பட்டு வருகிறது. இது மாவட்ட கருவூல அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.இம்மாவட்டத்தில் மாவட்ட கருவூலம் மற்றும் ஐந்து சார் நிலைக் கருவூலங்கள் உள்ளன.
- மாவட்ட கருவூலம் – கிருஷ்ணகிரி
- சார்நிலைக் கருவூலம் – தேன்கனிக்கோட்டை
- சார்நிலைக் கருவூலம் – ஓசூர்
- சார்நிலைக் கருவூலம் – கிருஷ்ணகிரி
- சார்நிலைக் கருவூலம் – போச்சம்பள்ளி
- சார்நிலைக் கருவூலம் – ஊத்தங்கரை
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம்
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் – கீழ் அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மூலம் கீழ்கண்ட எண்ணிக்கையில் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 29000 பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடி இணையத்தின் மூலம் சம்பளப்பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமரப்பிக்க இயலும். மேலும் இத்திட்டத்தில் அரசின் வருவாயினை இணையவழி மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதால் அரசின் நிகழ் நேர வரவினை உடனுக்குடன் அறிய இயலும். நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் எண்ம ஒப்பம் மற்றும் விரல் ரேகைப் பதிவுமுறை மூலம் உறுதிப்படுத்துவதன் மூலம் மாநிலத்தின் நிதி நிலை விபரம் உடனுக்குடன் அரசுக்குக் கிடைப்பதுடன் நிதி மற்றும் மனித வள மேலாண்மை நிர்வாகம் சிறப்பாக நடைபெற வழி வகுக்கும். தேவையற்ற கால தாமதமும் முறைகேடுகளும் தவிரக்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விபரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். இப்பணியினை அக்டோபர் 2018க்குள் முடித்திட எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் அக்டோபர் 2018-ல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசுப் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறும் வரை உள்ள அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக இத்திட்டத்தின் மூலம் கணினிமயமாகிறது. இத்திட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 23853 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெயர் / பதவி | தொடர்பு எண் | மின்னஞ்சல் முகவரி | முகவரி |
---|---|---|---|
கருவூல அலுவலர் மாவட்ட கருவூலம் கிருஷ்ணகிரி | 04343-239459 | dtokgi[dot]tndta@nic[dot]in | மாவட்ட ஆட்சியர் வளாகம், பெங்களுரு சாலை, கிருஷ்ணகிரி – 635001 |
உதவி கருவூல அலுவலர் சார்நிலைக் கருவூலம் – தேன்கனிக்கோட்டை | 04347-238040 | stokgi03[dot]tndta@nic[dot]in | வட்டாட்சியர் அலுவலக வளாகம், அரசு உயர்நிலைப் பள்ளி சாலை, தேன்கனிக்கோட்டை – 635107 |
உதவி கருவூல அலுவலர் சார்நிலைக் கருவூலம் – ஓசூர் | 04344-222264 | stokgi02[dot]tndta@nic[dot]in | 84/E0/H, இராயக்கோட்டை சாலை, ஓசூர் – 635109 |
உதவி கருவூல அலுவலர் சார்நிலைக் கருவூலம் – கிருஷ்ணகிரி | 04343-235681 | stokgi01[dot]tndta@nic[dot]in | வட்டாட்சியர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி – 635001 |
உதவி கருவூல அலுவலர் சார்நிலைக் கருவூலம் – போச்சம்பள்ளி | 04341-252255 | stokgi05[dot]tndta@nic[dot]in | தருமபுரி மெயின் ரோடு, வட்டாட்சியர் அலுவலக வளாகம்,போச்சம்பள்ளி – 635206 |
உதவி கருவூல அலுவலர் சார்நிலைக் கருவூலம் – ஊத்தங்கரை | 04341-220111 | stokgi04[dot]tndta@nic[dot]in | ஸ்பின்னிங் மில் ரோடு, ஊத்தங்கரை – 635207 |