மூடு

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்

  1. ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்தையும் உடல் நலத்தையும் மேம்படுத்துதல்.
  2. உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி சமுதாய உணர்வு இவற்றை சிறு வயதில் இருந்தே நல்லமுறையில் பேணிக்காத்தல்.
  3. குழந்தை இறப்பு விகிதம், நோய்வாய்படுதல், சத்துணவு பற்றாக்குறை ஆகியவற்றைக் குறைத்தல்.
  4. தாய்மார்களிடையே இயற்கையிலேயே உள்ள குழந்தை வளர்ப்புத் திறமையை சத்துணவு மற்றும் நலவாழ்வு கல்வி மூலம் அதிகரித்தல்.
  5. மகளிர் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பணியாற்றும் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1975-ம் ஆண்டு முதன்முதலாக தளி வட்டாரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் நாட்டை ஊட்டச் சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு கிராம அளவில் 0-5 வயதிற்குட்பட்ட உள்ள குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் ஆகியோரின் ஊட்டச் சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்த அங்கன்வாடி மையங்களை நிறுவி அதன் முலம் பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைத்திடவும், ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு மற்றும் கர்ப்பிணி பெண்களின் எடையை மாதாமாதம் சரிபார்த்து அவர்களுக்கு இணைஉணவு (சத்து மாவு) வழங்கப்படுகிறது.

இத்திட்டமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1796 அங்கன்வாடி மையங்களில் செயலபடுத்தபட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 13115 கர்ப்பிணி பெண்களும், 12282 பாலுாட்டும் தாய்மார்களும் இணை உணவு பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் 6-36 மாத குழந்தைகளில் 66855 குழந்தைகள் இணை உணவு பெற்று வருகின்றனர்.

அக்குழந்தைகள் வளர்ந்து 37வது மாதத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி அளிக்கும் வகையில் அங்கன்வாடி மையங்களில் மதிய உணவுடன் முட்டையும் வழங்கப்படுகிறது. மற்றும் முன்பருவக் கல்வியும் வழங்கப்படுகிறது. இம்மாவடட்த்தில் 37-60 மாத குழந்தைகளில் 19435 குழந்தைகள் பயன் அடைந்து வருகிறார்கள்.

மாதந்தோறும் குழந்தைகளை எடை எடுத்து அதன்படி தரம்பிரிக்கப்பட்டு 6-36 மாதம் இயல்பு நிலையிலும் மற்றும் மிதமான நிலையில் உள்ள குழந்தைகளுக்கு 150 கிராம் அளவு இணை உணவும் மிகவும் எடை இழப்புள்ள ஏற்பட்ட குழந்தைகளுக்கு 240 கிராம் இணை உணவும் வழங்கப்படுகிறது. இது தவிர கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் ஆகியோரின் ஊட்டச் சத்து நிலையை மேம்படுத்த 220 கிராம் இணைஉணவு இத்திட்டத்தின் மூலம் நாள்தோறும் வழங்கப்படுகிறது.

தொடர்பு அலுவலர் விவரம்
பெயர் / பதவி தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி முகவரி
மாவட்ட திட்ட அலுவலர் 9787704140 dpoicdskgi[dot]tn@nic[dot]in மாவட்ட திட்ட அலுவலகம்மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் கிருஷ்ணகி.