உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை
நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் நல்ல தரமான அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கச் செய்வதன்மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே பொது விநியோகத் திட்டத்தின் நோக்கமாகும்.
பொது விநியோகத்திட்ட கட்டமைப்பானது, உணவு தானியங்களை கொள்முதல் செய்தல், சேமித்தல் மற்றும் நியாயவிலைக் கடைகளுக்கு விநியோகம் செய்தல், உணவுப்பொருட்களை நியாயவிலை அங்காடிகள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்தல், அத்தியாவசிய பொருட்களின் நகர்வை கண்காணித்தல், துறையின் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை மீறுவோர் மற்றும் பொருள்களை களவாடுவோர் ஆகியோர்மீது குற்ற நடவடிக்கை எடுத்தல் ஆகிய நடைமுறைகளை பின்பற்றுகிறது.
தமிழ்நாடு அரசு, அகில உலக பொது விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்திக்கொண்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொது விநியோகத் திட்டத்தை ஏழைகளுக்கு உகந்ததாக்கி, தகுதியுள்ள அட்டைதாரர்களுக்கு 01.06.2011 முதல் விலையில்லா அரிசி வழங்க ஆணையிட்டுள்ளார்.
திஅரிசி
தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவான அரிசியானது, அரிசிஅட்டை மற்றும் AAY அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. 01.06.2011 முதல் விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது.
திவழங்கப்படும் பொருள்களின் அளவு
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி விலையின்றி வழங்கப்படுகிறது. கோதுமை, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுகிறது.
பொருட்களின் பெயர் | விலை (கிலோவுக்கு / லிட்டருக்கு) | வழங்கப்படும் அளவு (கி.கி.ல் / லிட்டரில்) |
---|---|---|
துவரம் பருப்பு | ரூ.30 | 1 |
உளுந்தம்பருப்பு | ரூ.30 | 1 |
பாமாயில் | ரூ.25 | 1 |
அந்தியோதயா அன்னயோஜனா (AAY)
AAY திட்டம் நமது மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஏழையிலும் ஏழையான பயனாளிகள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இத்திட்டம் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மத்திய அரசால் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கீழ்க்காணும் வகையை சேர்ந்த நபர்கள் / குடும்பங்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள்.
- விதவைகள், தீராத நோயாளிகள், ஊனமுற்றோர், 60 வயதும் அதற்குமேற்பட்ட வயதுடைய குடும்பமற்ற அல்லது சமுதாய ஆதரவற்ற அல்லது குறைந்தபட்ச வருமானம் இல்லாத முதியோர்கள்.
- மலைவாழ் குடும்பங்கள்
- எய்ட்ஸ் நோயாளிகள், தொழுநோயாளிகள், வீடற்ற நகரவாசிகள்
அன்னபூர்ணா திட்டம்
அன்னபூர்ணா திட்டமானது 2000 ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் துவக்கப்பட்டது. தேசிய முதியோர் பென்ஷன் திட்டத்தில் சேராத முதியோர்களின் உணவு பாதுகாப்பு தேவையை பூர்த்திசெய்வதே இதன் நோக்கமாகும்.
கீழ்க்காணும் தகுதிகளை பூர்த்திசெய்யும் பயனாளிகளுக்கு மத்திய அரசின் அன்னபூர்ணா திட்டத்தின் உதவி கிடைக்கிறது.
- மனுதாரரின் (ஆண் அல்லது பெண்) வயது 65 ம் அதற்கு மேலும் இருக்கவேண்டும்.
- மனுதாரர் ஏழையாக இருக்கவேண்டும். அவருக்கு சிறிதளவேனும் அல்லது நிரந்தரமான வருவாய் தன்மூலமாகவோ குடும்ப உறுப்பினர் மூலமாகவோ, இதர ஆதாரங்கள் மூலமாகவோ வரக்கூடாது.
- மனுதாரர் NOAP அல்லது மாநில பென்ஷன் திட்டத்தின் மூலம் பென்ஷன் பெறாதவராக இருக்கவேண்டும்.
- பயனாளிகள் மாதாந்திர 10 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்பெறுவார்கள்.
திபிரதம மந்திரி உஜ்வலா யோஜனா (PMUY)
இத்திட்டமானது சுத்தமான எரிபொருளான சமையல் எரிவாயுவை வழங்குவதவன் மூலம் மகளிர் மற்றும் குழந்தைகள் நலனை பாதுகாப்பதேயாகும்.
பெயர் / பதவி | தொடர்பு எண் | மின்னஞ்சல் முகவரி | முகவரி |
---|---|---|---|
மாவட்ட வழங்கல் அலுவலர் | 9445000396 | dso[dot]kgi@tn[dot]gov[dot]in | மாவட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி |
வட்ட வழங்கல் அலுவலர், பருகூர் | 9047871955 | tsoburgur123@gmail[dot]com | வட்ட வழங்கல் அலுவலகம், வட்டாட்சியரகம், பர்கூர் |
வட்ட வழங்கல் அலுவலர், தேன்கனிக்கோட்டை | 9445000401 | tsokgi[dot]denkanikottai@tn[dot]gov[dot].in | வட்ட வழங்கல் அலுவலகம், வட்டாட்சியரகம், தேன்கனிக்கோட்டை |
வட்ட வழங்கல் அலுவலர், ஓசூர் | 9445000400 | tsokgi[dot]hosur@tn[dot]gov[dot].in | வட்ட வழங்கல் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகம், ஓசூர் |
வட்ட வழங்கல் அலுவலர், கிருஷ்ணகிரி | 9445000397 | tsokgi[dot]krishnagiri@tn[dot]gov[dot].in | வட்ட வழங்கல் அலுவலகம், வட்டாட்சியரகம், கிருஷ்ணகிரி |
வட்ட வழங்கல் அலுவலர், போச்சம்பள்ளி | 944000399 | tsokgi[dot]pochampalli@tn[dot]gov[dot].in | வட்ட வழங்கல் அலுவலகம், வட்டாட்சியரகம், போச்சம்பள்ளி |
வட்ட வழங்கல் அலுவலர், சூளகிரி | 9486523344 | tsokgi[dot]shoolagiri@tn[dot]gov[dot].in | வட்ட வழங்கல் அலுவலகம், வட்டாட்சியரகம், சூளகிரி |
வட்ட வழங்கல் அலுவலர் ஊத்தங்கரை | 9445000398 | tsokgi[dot]uthangarai@tn[dot]gov[dot].in | வட்ட வழங்கல் அலுவலகம், வட்டாட்சியரகம், ஊத்தங்கரை |