மூடு

நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள்

மாங்கனி திருவிழா

மாங்கனி திருவிழா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய கண்காட்சிகளில் ஒன்றாகும். இக்கண்காட்சி ஆண்டு தோறும் ஜீன் மாதத்தில் நடைபெறுவது வழக்கம் அதே போன்று ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா 20 நாட்களுக்கு மேலாகவும் ஆறு இலட்சத்திற்கு மேற்ப்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இக்கண்காட்சியின் முக்கிய நோக்கம் பல்வேறு ரக மாங்கனிகளை விவசாயிகள் வாங்குவதும், விற்பதும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து கொள்ளும் நிகழ்வு ஆகும். இந்நிகழ்ச்சியினை மூலம் தரமான மாங்கனிகளை விவசாயம் செய்து பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதோடு அல்லாமல் மாம்பல கூழ் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் மாவட்டம் கிருஷ்ணகிரி ஆகும். இந்த நிகழ்வு முக்கிய சந்தை படுத்தும் நிகழ்வாக ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

பேட்டராய சுவாமி தேர் திருவிழா – தேன்கனிக்கோட்டை

விஷ்ணு பகவான் பேட்டராய சுவாமி கோவில் தேர் திருவிழா தேன்கனிக்கோட்டையில் ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்ச்சி மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் இவ்விழாவிற்கு இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலத்திலிருந்தும் வருகை புரிகின்றனர். இந்நிகழ்வு மூன்று நாட்கள் நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற வண்ண மயமான தேர்திருவழா ஆகும்.

சந்திர சூடேஸ்வரர் தேர்திருவிழா

சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் அந்த மலையின் அடிவாரத்தில் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இந்த திருவிழா வடநாட்டில் நடைபெறும் ஹோலி திருவிழாவை ஒத்த வண்ண மயமான திருவிழா ஆகும். இந்த விழாவிற்கு ஒசூர் மற்றும் அருகாமையில் உள்ள கிராமங்கிளில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழா ஆகும்.